லக்னோ செப் 24-
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் குரங்குகள் கூட்டம் சாதாரணமாக சுற்றித்திரியும். சில நேரங்களில் அட்டகாசத்திலும் ஈடுபடும். குரங்களுடன் கிராம மக்கள் சேர்ந்து வாழ பழகிக்கொள்வதும் உண்டு.
அதே போல் உத்திரப்பிரதேசம் மீரட் மாவட்டத்தில் பாக்பத் கிராமம் உள்ளது. இங்குக் குரங்குகள் மூலம் துன்பத்தையே சந்திக்கும் மக்களுக்கு இந்தச் சம்பவம் குரங்குகள் மீது உள்ளான பார்வையை நம் அனைவருக்குமே மாற்றியுள்ளது.
வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை அங்கே வந்த இளைஞர் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வனப்பகுதியில் இருந்த பழைமையான கட்டிடம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இங்கு மரங்களில் அமர்ந்து இருந்த குரங்குகள் சிறுமியைப் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் மீது பாய்ந்து கடித்து தாக்க தொடங்கியுள்ளன.
இவற்றைச் சற்றும் எதிர்பார்த்திடாத வாலிபர் குரங்குகளின் தாக்குதலிருந்து இந்த இடத்தைவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
அங்கிருந்து தப்பிய சிறுமி வீட்டிற்கு வந்து நடந்த விபரத்தைப் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்துக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மத்தியப் பிரதேசத்தில் பட்டப்பகலில் நடைபாதையில் பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டார். பலர் இந்தச் சம்பவத்தைப் பார்த்துக் கடந்து சென்றுள்ளனர் ஆனால் யாரும் தலையிடவில்லை.பலாத்காரத்தை ஒருவர் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ற வாலிபரிடம் இருந்து சிறுமியை விலங்குகளான குரங்குகள் காப்பாற்றியுள்ளது. மனிதநேயம் மிருகங்களுக்கும் உண்டு என்பதை நிரூபிக்கும் படியானதாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.