நிலாவும் ஒரு பெண் தானே பெண் என்றால் புன்னகை ஜொலிக்கும் வாசமிகு மலர்தானே ஆனால் என்னவள் மட்டும் மலரவில்லை என்னவளின் ஏக்கம் தான் என்ன!
என்னவளோ இரவிலே தோன்றி இரவிலே மறைகிறாள்? அவள் வாழ்க்கை இருள் சூழ்ந்ததாகவே இருக்கிறது...!!!
உலகின் பல படைப்பினங்களுக்கு ஒளி வீசி அவர்களின் மகிழ்ச்சியில் இவள் தன் மனதின் வேதனையை மறந்து இவ்வுலகினை மகிழ்வோடு நேசிக்கிறாள்...!!!
திருநெல்வேலி மாவட்டம் ஒரு ஊரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் அவர்களின் சீரும் சிறப்புமாய், செல்வ செழிப்புமாய் குத்து விளக்காய் தித்திக்கும் ஒரு பெண் குழந்தை இந்த பூமியில் மலர்கிறாள்....!!!! என்னவள் அவள் தானோ என்னவளின் அழகிய வர்ண ஓவியங்களை காண்போம்.
வெண்ணிலாவே நீ அழகோ...!!!இல்லை ஜொலிக்கும் இவள் பால் முகம் அழகோ...!!!இந்த அழகு தேவதையின் காவியங்கள் நம் நெஞ்சில் தித்திக்கும் தேன் சுவையாய் இனிக்கட்டும்...!!!!
தந்தை வழி உறவுகளின் சிறப்புமாய் தாய் வழி உறவுகளின் பெருமையாகவும் ஜொலிக்கும் பௌர்ணமி என்னவளின் தோற்றம்...!!!
வீரத்தின் பெருமையாகவும் தமிழர் பண்பாட்டின் பெருமைக்குரிய மங்கைகளின் வேலியாகவும் திகழும் எங்கள் திருநெல்வேலி சீமையின் சிறப்பு அம்சங்கள்....!!!!
அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில்!
திருநெல்வேலியின் புகழ் நிலைத்து நிற்கும் சுவை மிகுந்த இருட்டு கடை அல்வா
வீரம் விளைஞ்ச திருநெல்வேலி ஜில்லா
தமிழர் பண்பாட்டு விவசாயம்
இன்னும் பல்வேறு நெஞ்சை பிரமிக்க வைக்கும் அம்சங்களுடன்
என்னவளின் தொடர்கதை தொடரும்...!!!
இத்துடன் பாகம் -1 குளிர்கிறது மீண்டும் என்ன அவள் ஒளி வீசுவாள்....!!!!
பொதிகை இன்பச் சோலை K. Benazir beham