குறளோவியத்தின் தூரிகையே
*****
கலைஞரின் கைவண்ணத்தில் உருவானது குறளோவியம்
படிக்க படிக்க சுவைக் குன்றாது
குறளுக்கு சித்திரமாக அழகு சேர்த்தது
உடல் சோர்வுக்கும் உளச் சோர்வுக்கும்
நோய் தீர்க்கும் அருமருந்தாய் அமைந்தது
பெரியாரையும் அண்ணாவையும் அழகுற எழுதினாரே
தலைமகள் மருத்துவம் பயின்றாலும்
அன்னை தன் மகளை அழைக்க
அதைக் காட்ட எழுதிய அற்புதமான
தூரிகையின் தீட்டலே குறளோவியம்
எண்ணற்ற கருத்துக்கள் அடங்கிய காலச்சுவடு
கணவன் மனைவி பகுத்தறிவுச் சிந்தனையும்
அறுசுவையின் மூலம் அழகுறப் படைத்தாரே
ஒவ்வொரு குறளுக்கான
விளக்கமும் மெய்சிலிர்த்தது
இன்பத்தில் அமைதி கண்டு துன்பத்தை
தாங்கிக் கொள்ளும் மனப்
பக்குவத்தையும் சொன்னாரே
குறளோவியம் சுவைக் குன்றாத ஓவியம்
தூரிகையின் தூரரில் வந்து காற்றோடு
கலந்து உயிர் மூச்சாய் நின்ற
காலத்திற்கும் மறக்க முடியாத காவியம்
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்