அன்பு
***
அன்பின் ஆலயம் பாசத்தின் உச்சம்
ஆரவாரத்தோடு விலகாமல் இணைந்த கைகள்
இன்முகத்தோடு தித்திக்கும் திகட்டாத செங்கரும்பாய்
ஈடில்லாத பலாச் சுளையாய் சுவையூட்டி
உலகமே பார்த்து வியக்கும் படி
ஊரார் கண்ணு பட்ட போதிலும் நாங்கள்
என்றும் பிரியாமல் இறுதி வரை
ஏற்றமாய் வாழ்வாங்கு வாழ்ந்து எல்லோருக்கும்
ஐவகை உணவுகள் வைத்து உபசரித்து
ஒளிமயமான உலகத்தை கண்டு இரசித்து
ஓய்வே இல்லாமல் ஓடியாடி உழைத்ததை
ஓளவையும் ஏட்டில் எழுதினாளே எங்களை
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்