தமிழ் மகனே வாழ்க
****
திருக்குவளை கண்டெடுத்த அழகிய பொக்கிஷமே
மக்களின் இதயங்களில் வாழ்ந்த இரத்தினமே
மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்றே
திருக்குறளுக்கு உரை எழுதிய ஆசானே
சங்கத்தமிழுக்கு அழகு சேர்த்த காவியமே
தென்பாண்டிச் சிங்கமே அஞ்சாத நெஞ்சமே
மொழி போரில் களம் பாய்ந்தவரே
இளைய சமுதாயத்தை எழுதிப் பார்த்தவரே
கையில் அள்ளிய கடலே உனது
மலரும் நினைவுகள் பதினாறு கதையினிலே
படித்து கலைஞரின் கவிதை மழையாய்
மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களமாய்
தாய் வீட்டில் கலைஞராய் எனது
நெஞ்சுக்கு நீதியாய் சிலப்பதிகார காப்பியமாய்
குறளோவியமாய் கலைஞரின் சிறையில் பூத்த
சின்ன சின்ன மலராய் கதையாய்
முத்துக் குவியலாய் திரைப்பட வசனமாய்
தந்த காட்சியை மறக்க முடியுமா
நவீன தமிழகத்தின் சிற்பியே உனது
புகழும் தமிழும் வாழ்ந்துக் கொண்டிருக்கும்
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்