❤
இன்று இரவின் அமைதியிலும்
இசையின் மயக்கத்தை
அனுபவிக்க முடிகிறதென்றால்
அதற்கான காரணம் வானொலிதான்.
❤
பகலில் செய்தியும் இசையும்
கேட்க நினைத்தால்,
அதற்கான வடிகால்
வானொலிதான்.
❤இன்று இரவுப் பேழையில்
தேநீர் அருந்தியபோது,
இசையால் நம் மனதை
மூழ்கடிப்பது வானொலிதான்.
❤இரவு பகல் பாராமல் உழைப்பவர்களின்
பொழுதுகளை இனிமையாக்கி,
அவர்களின் காதுகளில் தேனினிய இசையாய்ப்
பாய்வது வானொலிதான்.
❤
சமையல் அறையில் பெண்களுக்குச்
சுவையான குறிப்புகள் கிடைத்தால்,
அவை அனைத்தையும் வழங்குவது
அந்த வானொலிதான்.
❤மருத்துவ
ஆலோசனையும் வழிகாட்டுதலும்
தேவைப்பட்ட தருணங்களில்,
அனைத்தையும் தந்து உதவுவது வானொலிதான்.
❤
தனிப்பட்ட மனிதனின் திறமையை
உலகுக்கு அறிமுகப்படுத்தி,
இண்டர்வியூ மூலம் அவரைச்
சிறப்பாக வெளிக்கொண்டு வருவது
வானொலிதான்.
❤
தொலைக்காட்சி சில சமயங்களில்
தொல்லையாகத் தோன்றும்போது,
வேலை செய்வதற்கும் இசையை இரசிப்பதற்கும்
இடமளிப்பது வானொலிதான்.
❤
ஒரு வேலை சிரமமாக இருக்கும் போதும்,
அந்தச் சிரமத்தை இசையால் மறக்கச் செய்து
நம் மனதைக் கவர்வது வானொலிதான்.
❤ இத்தனையும் கிடைப்பது
நம்ம அஸ்கர் சார் நடத்தும்
இசைமுரசு வானொலிதான்.
==========