விடை அறியா தேடல்
******
தேடி தேடி வாழ்க்கை தேடலானது
இரு கண்களும் அவளை பார்த்தன
அவளும் புன்னகைச் செய்தாள் என்னோடு
அவளுக்காக எழுதிய கடிதங்கள் ஏராளம்
அவளது கையில் கொண்டு சேர்க்க
மனம் ஏதோ தடுமாறுகிறது இதயம்
மட்டுமே துடிக்கிறது நாளுக்கு நாள்
தேடல் அதிகமாகி முகவரியை தேடினேன்
தேடினாலும் கிடைக்காத பொக்கிஷமாய் ஆனது
முகமூடித் திரையில் கண்கள் மட்டுமே
வந்து அடிக்கடி ஞாபகப் படுத்திட
ஏக்கங்கள் என் ஆழ்மனதில் வருத்ததோடு
எனக்காக பிறந்தவள் எனக்கு கிடைப்பாள்
என்ற நம்பிக்கையில் நாட்களும் ஓடின
கற்பனையில் வாழ்ந்தாலும் விடையறியா
தேடலாய் தேடிச் செல்கிறேன் நினைவுகளோடு
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்