நெஞ்சம் மறப்பதில்லை
*************
புரியாத வயதில் அறியா காதல்
படிக்கும் வயதில் வளரும் காதல்
மனதில் பல விதமான ஏக்கங்கள்
யாரிடமும் சொல்ல முடியாத தருணங்கள்
இதயங்கள் மட்டுமே பேசும் சூழல்
முகத்தைக் காட்டாமல் பார்த்த காதல்
இனம் புரியாத உணர்வுகள் நமக்குள்
வந்து அடிக்கடி நினைவூட்ட கடிதம்
மூலமே பதில் மட்டும் வர
கைகள் நடுங்க பயத்துடன் பிரிக்க
உன்னை பார்க்கும் நாளுக்காக காத்திருக்கிறேன்
வைர வரிகளால் நெஞ்சம் மறப்பதில்லை
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்