நிலவின் ஒளியில்
****
நிலவின் ஒளி இருட்டில் பிரகாசிக்க
என்னவளின் முகமும் அழகு சேர்ந்தது
இருவரும் கடற்கரை ஓரத்தில் கைக்கோர்த்த
நொடியில் பேசி மகிழ்ந்த தருணங்கள்
காற்றோடு காற்றாய் கலந்த நிமிடங்கள்
இரவு வானில் நட்சத்திரமும் பிரகாசிக்க
கடல் அலையில் கால் நனைக்க
அந்த அழகிய இராப்பொழுதை என்னவென்பது
காதலர்கள் கனவுக்கு ஏற்ற இடமோ
கண்ணும் கண்ணும் பேச முத்துக்கள்
சிதற சிந்திய புன்னகையை அள்ள
முடியாமல் கற்பனையில் வலம் வந்த
நான் அவளை நோக்க வெட்கத்தில்
நாணம் கொண்டு கால் கொலுசில்
ஓசையில் கடந்து சென்ற
நிமிடத்தை
வாழ்நாளில் என்னால் மறக்க முடியாதே
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்