டெல்லி செப் 27-
பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் இந்திய மக்களுக்குச் சுதந்திரம் தேவை ஏற்படுத்தியது ஆங்கிலேயர்களின் வரி வசூல் தான். கட்டபொம்மனை தூக்கு மேடைக்கு அனுப்பியதும் வரி வசூல் தான்.
ஓர் அரசை வழிநடத்த வரி என்பது அவசியமானது.இந்த வரியை நியாயமானதாகவும், நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளுக்கும்,குடிமக்களில் முன்னேற்றம் இதில் இருக்கும் என்றால் தாராளமனதுடன் செலுத்திவிடலாம்.
ஆனால் பாஜக அரசின் நிதி அமைச்சகம் அப்படி ஒரு வரி விதிப்பின்றி அநீதியான வரி விதிப்பைச் செய்துள்ளதை கிரீம்பன் விவகாரம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
மனிதனுக்குப் பசி வரும் போது கொஞ்சம் ருசி எதிர்பார்ப்பது இயல்பானது.இதனால் தான் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றாலும் பசி வந்தவுடன் நல்ல சுவை இருக்கக்கூடிய உணவகத்தை நாடிச் செல்கிறோம். பசி இல்லையெனில் எந்த மனிதனும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் கூட இருக்காது.
GST வரி வசூலில் ஆங்கிலேய அரசையே கீழே தள்ளிய பாஜக அரசு.தென்னிந்தியச் சாமானிய மக்களிடத்தில் GST அமல்படுத்திய காலத்திலிருந்து காரம் ருசியை வைத்து 18% வரி வசூல் செய்துள்ளார்கள்.
மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் GST கவுன்சில் கூட்டம் சமீபத்தில் கோவையில் நடைபெற்றது.கூட்டத்தில் பேசிய தமிழகத்தைச் சேர்ந்த அன்னபூர்ணா சீனிவாசன் தெரிவித்த கருத்து அதிர்ச்சியானது. சாதா பன்னுக்கு 5% GST வரியும், கிரீம்பன்னுக்கு 18% GST வரியுமென மிகப்பெரிய அளவில் வித்தியாசப்படுவதைச் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கேள்வி சாமானிய இந்தியர்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பியது எனலாம். இனிப்பு,காரம் எனச் சுவைகளை வைத்து GST வரி சதவீதம் நிர்ணயித்த பாஜக அரசு. வடமாநிலங்களில் இனிப்புப் பிரியர்களுக்கு 5% GST வரியும், தென்னிந்தியர்களின் காரம் பிரியர்களுக்கு 18% GST வரியையும் வசூல் செய்துள்ளது.
ஒரே நாடு,ஒரே தேர்தல் கோஷம் போடும் பாஜக கட்சி. வட இந்திய இனிப்புப் பிரியர்களுக்குச் சலுகை காட்டிவிட்டு. தென்னிந்தியக் காரம் பிரியர்களுக்கு 18% GST வரியை விதித்துள்ளது. இந்தப் பாரபட்சத்தை பாஜகவின் வானதியின் விளக்கம் அம்பலப்படுத்தியது.
இந்நிலையில், சர்ச்சைகளைப் போக்கும் விதமாகத் தின்பண்டங்களுக்கான வரி விகிதம் 18%-இல் இருந்து 5% ஆகக் குறைக்கப் பரிந்துரைத்து வருவதாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுவரை தின்பண்டங்களுக்கு 5%, 12% மற்றும் 18% என்ற 3 படி நிலைகளில் GST வரி வசூலித்து வருகிறது ஒன்றிய மோடி அரசு.