Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

திரை விமர்சனம் .. லப்பர் பந்து
KALEEL RAHMAN Sep 30 2024 கலை இலக்கியம்

திரை விமர்சனம் .. லப்பர் பந்து

நல்ல திரைப்படங்களை நம் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதின் நோக்கமே இந்த விமர்சனம்..


     லப்பர் பந்து சமீபத்தில் நான் பார்த்த நல்ல திரைப்படங்களில் இதுவும் ஒன்று. ஒரு சாதாரண எளிமை நிலை சமூகத்தில் இருந்து வரக்கூடிய இளைஞர்களின் கிரிக்கெட் விளையாட்டை பற்றிய படம் என்றாலும் பல்வேறு கோணங்களை கதைக்களம் தொட்டு செல்கிறது. சாதிய வன்மம் என்பது அனைத்து தளங்களிலும் இருக்கின்றது என்றாலும் விளையாட்டுப் போட்டியிலும்  அது எவ்வாறு தனது கோர முகத்தை காட்டுகின்றது, என்பதை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் .


         ஒரு சாதாரண குடும்பத்தில் வந்த இளைஞன் உடைய கிரிக்கெட்  கனவும் அவனுக்கு எதிராக  இருக்கக்கூடிய சாதிய தீண்டாமையும்  உடைத்துப் பேசி பேசப்பட்டிருக்கிறது. கதாநாயகன் நாயகி இவர்களின் காதலை தாண்டி , கதாநாயகியின் பெற்றோராக வரும் நாற்பது வயதை கடந்த தம்பதிகளின் காதல் அழகாக காட்சிப்படுத்தப்பட்டு நம்மை ரசிக்க செய்கிறது. கிரிக்கெட் மீது மிகவும் மோகம் கொண்ட மாமனார் மருமகன் இடையிலான சண்டை .உரசல் ,மன்னிப்பு அரவணைப்பு என அனைத்தும் சிறப்பாக அமைத்திருக்கின்றார்கள். புதிய திரைக்களம் என்றாலும் தொடக்கத்தில் இருந்தே அனைத்தையும் ரசிக்கும்படி காட்சிப்படுத்தியுள்ளார்கள். 


  இந்தத் திரைப்படம் அரசியலை வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் சாதிய அரசியலை படம் போட்டு காட்டி இருக்கிறது. வாழ்த்துக்கள் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து அவர்களுக்கு..


 ஆக்கம் :நஸ்ரின் மணாளன்