Hussain Ghani
Oct 01 2024
அண்மைச் செய்திகள்
உச்சநீதிமன்ற உத்தரவினை மீறி, குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் 500
ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் ஒரு பள்ளிவாசல், தர்கா
மற்றும் கபர்ஸ்தான் ஆகியவை செப்டம்பர் 28 அன்று இடிக்கப்பட்டுள்ளது.
Source video Thanks from Zee 24 Kalak
நாடு முழுவதும் இடிப்புகளுக்கு முன்பாக அனுமதி
பெறவேண்டும் என்ற சமீபத்திய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு, பொதுவழிகள் மற்றும் குறிப்பிட்ட பகுதிகளின் மீதான ஆக்கிரமிப்புகளை
தவிர்த்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, புகழ்பெற்ற சோம்நாத் கோவிலின் அருகில்
“அனுமதியில்லா கட்டிடங்கள்” என்று அழைக்கப்படும் அமைப்புகளை அகற்றும் முயற்சியின்
ஒரு பகுதியாக குஜராத் நிர்வாகம் இந்த இடிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சோம்நாத் மேம்பாட்டு திட்டத்திற்கான இடத்தை வசதியாக்க இது
நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையில் சுமார் 36 பூல்டோசர்கள் மற்றும் 30 ஜேசிபிக்கள், 50 டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கிர் சோம்நாத் மாவட்டத்தில் இதுவரை நடந்த புல்டோசர்
இடிப்புகளில் இது மிகப் பெரிய இடிப்பு நடவடிக்கையாக சொல்லப்படுகிறது.
1,200 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு,
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர்
மேற்பார்வையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அந்த பகுதி முற்றிலும் முடுக்கப்பட்டு, இடிப்பு நடவடிக்கைகளில்
ஈ:பட்டுள்ள அதிகாரிகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.
இந்த இடிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த
70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இடிப்பு நடவடிக்கையின்
மூலம் பள்ளி மற்றும் தர்காவிற்குச் சொந்தமான 102 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக
செய்திகள் தெரிவிக்கின்றன.