Sunday 24 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

அம்பேத்கர்
ம.செ.அ.பாமிலா பேகம் Oct 06 2024 வாழ்வியல்

அம்பேத்கர்

அறிவு வெளிச்சம் அம்பேத்கர்

*************

வறுமை குடும்பம் எல்லாவற்றையும் கடந்து

வெளி நாட்டில் கல்வி பயின்ற மாமேதை/

அம்பேத்கர் அறிவுச் சுரங்கம்/

அறியாமைக்கு எதிராக ஆற்றிய பணிகள் 

சான்றோர் நெஞ்சில்

நிலைக்கச் செய்ததே/

பகுத்தறிவுச் செம்மல் ஆராய்ச்சியின் சிகரம்

மக்களின் மாபெரும் வழிக்காட்டி/

பகுத்தறிவுத் துறையில்

அவருக்கு இணை அவரே/

பதினெட்டு மணி நேரம் ஒரே நாளில் கல்வி கற்க செலவிட்ட மாமேதை/

மனித உரிமைக்காக எடுத்துக் கொண்ட முயற்சி எண்ணற்றவை/

மக்களால் நடத்தப்படும் மக்களாட்சியை விரும்பியவர்/

அரை வயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும்

ஊமைகளின் உறுப்பினராக பேசத் தொடங்கியவர்/

இவ்வுரிமைக் குரல்  வட்ட மேஜை மாநாட்டில் வழியே உலக அரங்கில் எதிரொலித்தது/

அறியாமை அனைத்திற்கும் மூலக்காரணமே/

ஒவ்வொருவரும் முழு மனித நிலையை அடைய

கல்வி செல்வம் உழைப்பு மூன்றும் தேவையே/

மாணவனுக்கு கல்வி தகவலை திணிப்பதாக

இருக்கக் கூடாதே/

ஊக்கத்தைத் தூண்டி தனித் திறமையை வெளியே கொண்டு வர வேண்டுமே,/

இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக் கதிரே/

சாதி களையப்பட வேண்டிய களை என்றாரே/

சனநாயகத்தின் மறுபெயர்  சகோதரத்துவம்

சுதந்திரம் என்பது சுயேச்சையாக நடமாடும் உரிமை/

உயிரையும் உரிமையும் பாதுகாக்கும் உரிமை அது/

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில்

எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவது சமத்துவமே/

சமத்துவத்தின் மறுபெயர் மனித நேயம்

சமத்துவம் மறுக்கப்படும் போது

மனிதப் பண்பு மறைந்து விட்டதே உணர்த்தியவர்/

மனித உரிமைக்காக உழைத்தவர்/

சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதி புழுக்கள் அரித்து விடாமல் தடுத்த நச்சுக் கொல்லி மருந்து அவர்/

சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்/

இவரைப் போல ஒப்பற்ற தலைவரை இனி காண்பது அரிதே/

ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்

.