MAAHMA
Oct 08 2024
MAAHMA
எண்ணங்களை எழுத்தாக மாற்றி சிறுகதைக்குள் கொண்டு
வரும் அழகே தனிதான்
குறைந்த புத்தகங்களே படிக்கின்ற இந்த காலங்களில்
படிப்பை நேசிப்பவர்களுக்கு புத்தகங்கள் கிடைக்காதபிரதேசத்தில் இருந்துவந்தேன்.
இருந்தாலும் ஆர்வத்தை விடவிரும்பவில்லை. என்னை மேம்படுத்தியவாசிப்பை, எழுத்தை அறிமுகப்படுத்திய வாசிப்பை, தொடரவே
முற்ப்பட்டேன்.
கிறுக்கல்களின் தொகுப்பாக கவிதையை பார்த்துவந்த
நான் அதை கவிதையாக அங்கீகரித்த வாட்ஸ்அப்குழுமத்தில் என் தங்கைக்கு கிடைத்த பரிசான
இறையன்பு எழுதிய “வாய்க்கால் மீன்கள் “புத்தகத்தை படிக்கவாய்ப்பு கிடைத்தது. ஜெயா
டிவி ஆரம்ப காலத்தில் ஆன்மீக நிகழ்ச்சியில் இறையன்பு என்ற IAS அதிகாரியைபார்த்தது மட்டும் எனக்கு ஞாபகம் இருந்தது. அவரைப்பற்றிய
அறிமுகம் எனக்கு இந்தக்கதையின் வழியாககிடைத்தது. அழகான காதல் கதை. ஆசிர்வாதங்களின்
அடைக்கலமாக கதாநாயகன்பெரியவர்களைப்பார்த்த விதம், நாணத்துடன்
பெண்களை சித்தரித்த விதம், காதல் இருந்தும், உப்பு தின்றநன்றியை கொச்சைப்படுத்தாமல் நாயகன் செய்த செயலும் , வங்கிகளின் மாற்றல்களுக்கு ஆளாகும் சகமனிதனின் நெருக்கடி என
சொல்லிக்கொண்டே போகலாம். சிறிய கதைதான் எனினும் தலைப்பே அருமை. 80 களில் வாழ்ந்தவர்களால் இணைத்துப்பார்க்க முடியும் என்பது உறுதி.
அதைத்தொடர்ந்து நான்மூளைக்குள் சலவை என்ற புத்தகத்தையும் வாங்கிப்படித்தேன்.
அவரின் எழுத்துக்கு இப்போது நான்ரசிகையாகிப்போனேன். வாய்ப்பிருப்பவர்கள் வாங்கி
படிக்கலாம் .