Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

தடய அறிவியல் என்றால் என்ன?
சி. ஆப்ரின் Oct 16 2024 தொழில்நுட்பம்

தடய அறிவியல் என்றால் என்ன?


தடய அறிவியல் அல்லது தடயவியல் (forensic science) என்பது அறிவியலின் உதவியுடன் குற்றச்செயல்களை ஆராயும் ஒரு துறையாகும். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் தடயங்களை எடுத்து, அவற்றை ஆராய்ந்து, நீதிமன்றத்தில் அந்தச் சாட்சிகளைத் தடயவியல் வல்லுனர்கள் சமர்ப்பிக்கின்றனர்.

 

 blood, hair, footprint and, fingerprint, Trace evidence and handwriting forgery etc....

போன்றவற்றைத் தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து முக்கியமான ஆதாரங்களைத் தருகின்றனர். அறிவியல் பூர்வமான ஆதாரங்களாக இவை அமைகின்றன. இது தவிர கையெழுத்து மோசடிகள் குறித்து ஆராய்வதும் இத்துறையில் அடங்கும்.

 

 காவல்துறை, சட்ட அமலாக்கத் துறை, பல்வேறு வகையான சட்ட அமைப்புகள், அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்கள் முதலியன தடய அறிவியல் துறையை நாடுகின்றன. இப்போது பெண் தடய அறிவியல் ஆய்வாளர்களும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.

 

இன்று நவீனத் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப்படும் சைபர் குற்றங்கள், மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளைக் கொண்டு நடத்தப்படும் குற்றங்கள் எனக் குற்றத்தின் வளர்ச்சிக்கேற்ப இந்தக் குற்றங்களைக் கண்டறிய காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் உதவியாக இருப்பது தடய அறிவியல் ஆகும்.

 

கொலை, பாலியல் ரீதியான தொந்தரவுகளை டி.என்.ஏ மூலம் கண்டறிவது, குண்டுவெடிப்பு நடைபெற்ற இடங்களில் கிடைக்கும் தடயங்களை வைத்து அது எந்த மாதிரியான குண்டு என்று கண்டறிவது, ஒரு சில வழக்குகளில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி அல்லது ஆயுதம் எந்த வகையைச் சேர்ந்தது என்பது பற்றிய பல்வேறு முக்கியத் தடயங்களைக் கண்டறிய தடயவியல் உதவி வருகிறது.

 

தடய அறிவியல் துறையின் பயன்பாடுகள் :

நடந்த குற்றத்தில் நீதியை நிலைநாட்டுவதற்கு, உண்மையைக் கண்டறிதல், சரியான நபர்களை அடையாளம் காணுவதற்குத் தேவையான தடயங்களை எடுத்து அறிவியல் பூர்வமாக நிரூபித்தல் ஆகியவை தடய அறிவியலின் பணியாகும்.  காவல் துறை இவர்களது தேவையைக் கருதி அழைக்கும் போது குற்றம் நடந்த இடத்துக்குச் செல்வர். குறிப்பிட்ட குற்றத்துக்கு என்று மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, குண்டுவெடிப்பு, விபத்தில் இறந்த மற்றும் சிதைந்த உடல்களை அடையாளம் காண்பது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தடய அறிவியல் துறை மேற்கொள்கிறது.

சிதைந்த அடையாளம் காண முடியாத ஒரு சடலத்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிவதும் இறந்த நேரத்தைக் கண்டறிவதும் (time of death) தடயவியலாரின் பணியாகும்.

 

கைரேகை

கைரேகை மூன்று வகைப்படும் அவை

1.Loop

2.whorl

3.Arch

 

குற்றம் நடந்த இடத்தில் சோதனை செய்யும் முறை

Searching methods:

1.Line method

2.Grid method

3.Zone method

4.Spiral method

இந்த முறையில்தான் குற்றம் நடந்த இடத்தில் சோதனை செய்ய வேண்டும். இது மட்டும் இன்றித் தடயங்களை எடுத்துக் கொள்ள முறைகள் உள்ளன.(Evidence of collection)

 

பிரிவுகள் :

தடய அறிவியலில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. அவற்றுள் சில:

     Fingerprint examination

     Odontology

     Toxicology

     Pathology

     Balastics

     Question Document

     Entomology

 

தமிழகத்தில் தடய அறிவியல்:

 

நடமாடும் தடய அறிவியல் (Mobile Forensic Science Laboratory) அலுவலகங்கள் 33 இருக்கின்றன. சென்னை அலுவலகத்தில் மட்டும் அனைத்துச்  சோதனைகளையும் செய்யும் வசதி இருக்கிறது.