மழை, எப்ப வரும் எப்ப வரும் என நாம் ஏங்குகிறோம்
மழை வந்தபின் எங்கடா ஓடி ஒளிவது என்று நாம் ஓடி ஒளிகிறோம்.
வெயில் எவ்வளவு அடித்தாலும்
ச்சே ! என்ன வெயில் என்று முணுமுணுத்துக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்கிறோம்.
ஆனால் தொடர்ந்து மூன்று நாட்கள் மழை பெய்தால் இந்த மழை எப்ப விடும் என நாம் வெளியே செல்ல ஏங்குகிறோம்,
மழை பெய்வதனால் பூமி குளிர்ச்சி அடைகிறது. மனிதனின் உடம்புக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. மழை பெய்து, சில நாள்களில் செடிகள் பச்சைப் பசேல் என்று பார்ப்பதற்கே இனிமையாக இருக்கும்.
மழைக்காலத்தில் மழை நின்றபின் காற்றடிக்கும் போது மரத்தின் இலைகளில் இருந்து மழைத்துளிகள் நம் மேல் விழும்போது அந்தச் சுகமே தனிதான்.
மழைக்காலத்தில் புற்பூண்டுகள் வளர்ந்து செழித்து நிற்கும். வீட்டில் மாடித் தோட்டத்தில் பூக்களெல்லாம் பூத்துக் குலுங்கும். சூடான உணவும். சூடான தேநீரும் இதமாக இருக்கும். பேருந்தில் ஜன்னலோரம் உட்கார்ந்து பயணம் செய்யும்போது மழைச்சாரல் நம்மீது விழும். அதுவும் ஒரு சுகமே
பேருந்தில் பயணம் செய்யும் போது சாலையில் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு அதன் டயர்கள் செல்ல, இசைமுரசு இணைய வானொலியில் நாகூர் ஹனீஃபா பாடல்களைக் கேட்டபடியே பயணிப்பது ஒரு சுகமே.