அரசியலில் அறம் அகவை அறுபது
*****
திராவிட முன்னேற்ற கழகத்தின் உறுப்பினரே
விடுதலை புலிகளுக்கு ஆதரவுக் கொடுத்தவரே
விடியலாகவும் விதையாகவும் நட்சத்திர மாகவும் வந்தவரே
சேற்றில் மலர்ந்த செந்தாமரை ஆனவரே
நாணயம் உள்ளவரின் நம்பிக்கையின் நாற்றாங்கலே
தன்னையே உருக்கும் மெழுகுவர்த்தி ஆனாயே
மண்ணுக்கு வெளிச்சம் கொடுத்த தலைவரே
தமிழ் மொழியை விதையாக விதைத்து
விருட்சமாக காட்டி தந்த நிழலே
முடிசூடா மன்னனாகவும் அண்ணனாகவும் இருந்தாரே
தொலை நோக்கு பார்வையோடு தொண்டாற்றியவரே
மதுவை எதிர்த்து நடைப்பயணம் செய்தவரே
சுற்றுச்சூழலைப் பாதுகாத்து வெற்றியும் கண்டவரே
சீமைக்கருவேல மரங்களை அகற்றச் சொன்னவரே
முல்லைப் பெரியாறுக்காகப் போராட்டம் கண்டவரே
மீத்தேன் போராட்டத்தில் பிரச்சாரம் செய்தவரே
காவேரி பிரச்சனைக்காக கல்லணைக்கும் சென்றாரே
ஸ்டெர்லைட்டுக்காக பதினெட்டு ஆண்டு போராடினாரே
தனித்தமிழ் ஈழத்தையும் இவர் விட்டிடவில்லை
புத்தகம் எழுதுவதிலும் தலைநிமிர்ந்து நின்றாரே
பெரியார் அண்ணா வழி நடத்திய
திராவிட இயக்கத்தின் தொடர் மறுமலர்ச்சியே
இன்முகம் கண்டு மணம் வீசுவரே
நாட்டின் அவலங்களையும் தட்டி கேட்டாரே
சறுக்கல் வந்தாலும் விடாமல் போராடினாரே
நம்பிக்கையின் தூணாக நின்று உழைத்தவரே
பொடாச் சட்டத்தில் சிறைவாசம் சென்றாலும்
இன்னல்களை எல்லாம் தாங்கிக் கொண்டவரே
தமிழ் மக்களுக்காக நாளும் தொண்டாற்றியவரே
பேசிய வார்த்தைகள் எல்லாம் காற்றோடு
காற்றாய் கலந்து உள்ளத்தைத் தொட்டதே