நலம் தரும் நவராத்திரி
***
நவம் என்றால் ஒன்பது எண்ணிக்கையே
கலைகளை போற்றும் விழா ஆகுமே
வாழ்வில் செம்மையாக வாழ நமக்கு தேவை
என்பதை தொட்டு உணர்த்தும் நலம்
தந்து காட்டிட செய்வதே நவராத்திரி
கல்வி செல்வத்தை வீரத்தை எளிதாக
பெற்றிட முடியாது அதற்கான முயற்சியும்
துணிவும் பொறுமையும் நமக்கு வேண்டுமே
இறை சக்தியே நம்மை இயக்கும்
சக்தியாய் ஆசி வழங்கிட செய்யுமே
கொலு அழகுக்கோ ஆடம்பரத்துக்கோ அல்ல
நம்முடைய வாழ்வியல் தத்துவமும் அடங்குமே
ஒன்பது படியும் அர்த்தங்கள் உள்ளடக்கியதே
முதல் படியில் ஓரறிவு உயிரினப்
பொம்மைகள் இரண்டாவது படியில் இரண்டறிவு
உயிரினப் பொம்மை மூன்று நான்கு
ஐந்தாம் படியில் எண்ணிக்கைச் சார்ந்த
உயிரின அடையாளம் ஆறாவது படியில்
மனித உருவ பொம்மை ஏழாவது
படியில் ரிஷிகளின் பொம்மை எட்டாவது
படியில் தேவர்கள் நவக்கிரகங்கள் ஒன்பதாவது
படியில் இறைவனது பொம்மைகள் என
கொலு வைப்பது வழக்கம் ஆகுமே
பக்தியோடு பாட்டும் நடனமும் ஒன்றாய்
இணைகின்ற போது நலம் தரும்
நவராத்திரியாய் அமைந்து இன்பத்தைத் காட்டுகிறதே
உள்ளத்து உணர்வோடு கொண்டாடி மகிழ்ந்தால்
எல்லா நாளும் நமக்கு பண்டிகையே
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்