Sunday 24 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

வாழ வந்தவள்
ம.செ.அ.பாமிலா பேகம் Oct 18 2024 காலக்கண்ணாடி

வாழ வந்தவள்

வாழ வந்தவள்

****

அந்தியூர் கிராமம் அழகான கிரமாம் சில்லென குளிர் காற்று பறவைகளின் இன்னிசைக் குரலோடு தான் பொழுது விடியும் 

ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் அம்மா அப்பா கூலி வேலைப் பார்ப்பவர்கள்,குழந்தை இல்லாமல் வருந்தினார்கள் இறைவன் அருளால் அவர்களுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு குழந்தைப் பாக்கியம் கிடைத்தது. 

அமுதா  என்ற பெண் குழந்தையைப் பெற்றாள் நாள்கள் நகர அமுதா வளர்ந்து பெரியவள் ஆனாள் நாகரீகம் இல்லை  படிப்பறிவும் குறைவு தான்.ஆனால் குணத்தில் தங்கம் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வாள் .

அம்மா அப்பாவுக்கு நாள்கள் செல்ல அவர்களுக்கு வேலை சரியாக இல்லை அமுதாவை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது வரன் பார்க்க ஆரம்பித்தார்கள் மாப்பிள்ளை பட்டணத்து மாப்பிள்ளை ஆனால் அமுதாவுக்கும் பெற்றோருக்கும் தயக்கம் அமுதாவுக்கு வெளி உலகம் பற்றி அறியாமல் வளர்ந்தவள் என்ன செய்வது எல்லாம் இறைவன் போட்ட முடிச்சு என நினைத்து சம்மதம் தெரிவித்தார்கள்.


திருமண நல்ல படியாக நடைபெற்றது மாப்பிள்ளை நாகரீகமான மாப்பிள்ளை சொந்த தொழில் செய்கிறவன்.

அமுதாவும் மகிழ்ச்சியோடு கணவனுடன் ( மணிவுடன்) சென்றாள்


நாள்கள் சென்றன அமுதா தன்னுடைய மாமனார் மாமியாரை பெற்றோர் போல பார்த்துக் கொண்டாள்

வாயிக்கு சுவையான பண்டங்களை செய்துக் கொடுத்தாள்

ஆனால் நாகரீகம் மட்டும் அவளிடம் இல்லை

கணவன் மணி நாளடைவில் அவளை 

வெளியே ஓரிடமும் அழைத்துச் செல்வது இல்லை மாமனார் மாமியார் வருத்தமடைந்தனர் நாகரீகம் இல்லை என்ற காரணத்திற்காக அவளை ஒதுக்கி விடாதே நமது வீட்டிற்கு வாழ வந்தவள் நாம் தான் வாழ வைக்க வேண்டும் என்று மகன் மணிக்கு அறிவுரை

வழங்கினார்கள் .


மணியும் கேட்டு கொண்டு மனைவியிடம் அன்பாக பேசி அவளை திருத்த முயற்சி செய்தான்.

தனக்கான ஓய்வு நேரத்தில் அவளுக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தான்

அழகு கலை வகுப்புக்கு எல்லாம் அனுப்பி வைத்து அமுதாவை ஊரே போற்றும் படி வியக்க வைத்தான்

இல்லறம் நல்லறம் ஆனது இருவருக்கும் அழகான பெண் குழந்தை பிறந்தது.

மகிழ்ச்சியோடு வாழ்வை மீண்டும் தொடங்கினார்கள்

மாமனார் மாமியார் அமைவது இறைவன் கொடுத்த வரம்


ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்