பெங்களூர் அக் 19
முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் எழுப்புவது மத நம்பிக்கையைப் புண்படுத்தாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மசூதியில் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டது தொடர்பாக இரு நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவில் பாசிச மோடி ஆட்சிக்கு வந்த பின்பு நீதிமன்றங்கள் அனைத்தும் காவிமயமாக்கப்பட்டு வருகின்றன.
பாபர் மசூதியை இடித்த RSS கும்பலுக்கு ஆதரவாகவும், மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு தீர்ப்பளித்தது முதல் மற்ற மதத்தினர்களின் வழிப்பாட்டு தளத்தில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டது என காவி கும்பலுக்குச் சேவை செய்யும் நிறுவனங்களாகவே நீதிமன்றங்கள் தற்போது முழுமையாக மாறிவருகின்றன.