தலைப்பு// யாதும் ஊரே யாவரும் கேளீர்
************************
கணியன் பூங்குன்றனாரின் ஒற்றை வரி
உலக மக்களிடம் புகழ் பெற்றதே
சமத்துவம் சகோதரவமும் பரவ வேண்டுமே
சிந்தனை தெளிவானால்
செய்யும் செயல் சிறப்பாகுமே
நீரில் ஓடும் படகு தத்தளிப்பதைப் போல
மனிதன் வாழ்வும் உள்ளதே
உலகில் இருக்கும் வரை எல்லோரையும் மதித்து நடக்க வேண்டுமே
ஒற்றுமை உயர்த்தும் உயர் கருத்தே
யாதும் ஊரே யாவரும் கேளீர்
வாழ்க்கை மனிதனை பண்படுத்தி செல்லுமே
இளமையில் தன்னை மறந்து அவளுக்காக வாழ
குழந்தை பிறக்க அன்பு விரிவடையுமே
மெல்ல மெல்ல தன்னலம் கரைய
பொது நலம் மிகுந்து
வாழ கற்றுக் கொண்டானே
உலகத்தில் மக்கள் எல்லாம் இன்புற
ஒற்றுமையாய் வாழ்ந்தாலே
அருளுலகம் சிரித்துக் கொண்டே மலருமே
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்