,ஏழைத்தாய்
********
வனிதாவுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஏழ்மையான குடும்பம்
வனிதா வேலை செய்தால் மட்டும் தான் குடும்பத்தை காப்பாற்றும் நிலை
தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளியாக பணி செய்கிறார்.
மூத்த மகன் அன்பு அரசாங்க பள்ளியில் படித்தான் போதிய வருமானம் இல்லாததால் வேலைக்கு சென்று விட்டான்.
இளைய மகன் பரத் நன்றாக படிப்பான் படிப்பில் மட்டுமல்ல போட்டிகள் வைத்தாலும் முதல் மாணவனாய் வலம் வருவான்.
அம்மாவிடம் தினமும் சொல்லுவான் நம்மிடம் பணம் இல்லை எனது ஆசை மருத்துவராகி ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் என்பதே எனது இலட்சியம் என்றான் அம்மா நீ கவலைப் படாதே இறைவன் வடிவில் நமக்கு யாராவது உதவி செய்வார்கள் என சமாதானம் படுத்துவாள் வனிதா
நாட்கள் ஓடின 12 ஆம் வகுப்பு பொது தேர்வும் நெருங்கின
நன்றாக படித்தான் மாநிலத்திலேயே முதல் மாணவனாய் வலம் வந்தான் அம்மாவிற்கு அளவில்லா மகிழ்ச்சி
நாளிதழ்கள் தொலைக்காட்சிகள் எல்லாம் இவனை பேட்டி கண்டது.
பரத் மனதில் நமது கனவு நிறைவேறுமா என்ற எண்ணம் தான் ஓடியது
நாட்கள் சில ஓடின தீடீரென ஒரு நாள் கதவு தட்டும் சத்தம் கேட்டது அம்மா ஓடிப் போய் கதவை திறந்தாள் அரசு அதிகாரிகள் நிற்பதைப் பார்த்து படபடத்தாள்
அம்மா நீங்கள் பயப்பட தேவையில்லை உங்கள் மகனை நாங்கள் பார்க்க வந்தோம் என்றார்கள்
உடனே வனிதா மகனை அழைத்தாள்.மகன் வந்தவருக்கெல்லாம் வணக்கம் சொல்லினான் வந்தவர்கள் உனது ஆசை என்ன என்று கேட்க எனக்கு மருத்துவராக வேண்டும் என்றான்.சரி நீட் தேர்வு எழுதினாயா என்றார்கள் ஆம் ஐயா அதையும் எழுதி அதிலும் நல்ல மதிப்பெண் தான் என்றான் இந்த ஏழையை யாருக்கும் தெரியவில்லை இறைவன் வடிவில் நீங்கள் வந்தீர்கள் என்றான்.ஆம் நாங்கள் தான் உன்னை இலவசமாக எல்லா செலவையும் ஏற்று படிக்க வைக்கிறோம் என்றவுடன் ஏழைத்தாயின் கண்ணில் ஆனந்த கண்ணீர் வந்தது
இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் பரத் வீட்டை நோக்கி வந்தார்கள் பரத்தை அழைத்துச் சென்றார்கள் வனிதா இரண்டு கைகளையும் அசைத்து வழியனுப்பினாள் .
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்