குருவை வணங்க கூசி நிற்காதே
*******
படித்து தந்த குருவை வணங்கிடு/
பெரியோர்களுக்கு மரியாதை செய்தாலே/
நாளும் வளர்வாய் செல்வங்களோடு நீ/
நாம் போகும் இடத்திலும் பெரியவர்களுக்கு/
முன்னுரிமைக் கொடுத்து மதிப்பினை வழங்கிடு/
சொன்ன சொல்லுக்கு கட்டுபட்டு நடத்திடு/
எதிர்த்து பேசுவதை விட்டு விடு/
பெரியோர்க்கு உதவி செய்து வாழ்ந்தாலே/
நற்பயனை அடைந்து விடுவோமே/
வயதான காலத்திலும்
அன்பாக இருந்திடு/
குருவை பார்த்தும் பார்க்காமல் போகாதே/
அவர்களிடம் இருந்து ஓதுங்குவதால் எந்த/ பயனையும் கண்டதில்லை நம் வாழ்வில்/
நேர் மறை எண்ணங்களோடு வழி நடத்தியவர்கள்/
சிந்தனைகள் எல்லாம் கற்று திகழ்ந்தவர்கள்/
உயர்ந்த இடத்தில் நாம் சென்றாலும்/
அவர்களுக்கு மரியாதை கொடுப்பது நமது கடமை/
ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்