Monday 25 11 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

காதலை சுவாசிப்போம்..!!!
பொதிகை இன்பச் சோலை K. Benazir Jul 11 2024 கலை இலக்கியம்

காதலை சுவாசிப்போம்..!!!

* இதயங்களே  ஜாதி ,மதம், இனம், மொழி , நாடு இவைகளை கடந்து வரும் காற்றை  போல் காதலையும் நாம் சுவாசிப்போம்...!!!


* என்னை நேசிக்க வைத்த அவனுக்கு நான் வாசித்த முதல் கவிதை என் பெண்மை...!!!


* எனக்காக சிரிப்பதற்கும் ,அழுவதற்கும் ஒரு உயிர் இந்த மண்ணில் இருக்கும் என்றால் அது என்னவனின் இதயம் தான்...!!!




* பிணம் போகும் பாதையில் மலர் தூவும் மனிதர்கள், இரு மனம் போகும் பாதையில் மலர் தூவ மறுப்பது ஏன்..?? 


* என்னவனே உன் புன்னகை கண்டு அது எனக்காகத்தான் என்று, இரவோடு நான் எறிவதும் பகலோடு நான் உறைவதும்...!!!!


* நீ வாழும் அறைகளில் நின்று  உன் வாசம் நாசியில் உண்டு, நுரையீரல் பூ மலர்வதும் , நோய் கொண்டு நான் அழுவதும்...!!!!நேரில் கண்டு உண்மை சொல்ல நெஞ்சில் மட்டும் வார்த்தைகளும்...!!!


* உலகைக் காட்டியது பெற்றோர் என்றாலும் அதை ரசிக்க வைத்ததோ என்னவனின் காதல்...!!!


* என்னை உறங்க வைக்கும் தலையணையும் நீதான்.!!!தூக்கம் கலைத்து விடும் கனவுகளும் நீதான்...!!!



* இடையில் இறங்கி விடுவோம் என தெரிந்தே ஒரு பயணம்..!!!


* ஒருநாள் இறந்து விடுவோம் என தெரிந்தே ஒரு வாழ்க்கை...!!!!


* அதேபோல் நாம் நேரில் காண்போமோ..! மாட்டோமோ...!எனத் தெரிந்தே ஒரு வகை காதல்..!!! கண்மூடித்தனமான காதல்...!!


* என் வீட்டு ரோஜாக்களில் உன் முகம் காண்கின்றேன்..!! நான் சூடும் பூக்களில் என்னவனே உன் வாசம் உணர்கிறேன்..!!!


* நீ ஆறுதல் சொல்ல என் அருகில்  இருந்தால் என் சோகம் கூட ஒரு சுகம் தான்...!!!




* இரவில் தோன்றும் நிலவை விட அழகானது..!!!என் மனதில் இருக்கும் என் அவனின் நினைவுகள்..!!!


* மலரும் போது பூக்கள் அழகு..!!


 *ஒளிரும் போது நிலவு அழகு....!!!


 *என் அன்பை உணரும்போது நம் காதல் அழகு...!!!


 *என்னவனே உன்னோடு நான் வாழ்ந்தால் இந்த உலகமே அழகுதான்...!!!


* நேசிப்போம் சுவாசிப்போம் காதலே மீண்டும் என்னை ஒரு முறை சீண்டுவாயா...!!!!