ஆரோக்கியம் என்பது
உணவின் மூலம் நமக்குக் கிடைக்கிறது
அந்த உணவைச் சத்தான உணவாக எடுத்துக் கொள்வது
நமது உடலுக்கு மிகவும் நல்லது.
கொள்ளுத் துவையலும் கொள்ளு ரசமும்
ஜலதோஷம் பிடித்திருக்கும் நிலையில் நமது உடம்புக்கு நல்லது.
உளுந்தம் பருப்புக் கஞ்சியும்
உளுந்தம் பருப்புக் களியும்
இடுப்பு வலிக்கு நல்லது
பிரண்டைத் துவையலும் பிரண்டைக் குழம்பும்
கால் வலிக்குச் சிறந்த மருந்தாகும்.
முருங்கைக் கீரையில்
இரும்புச் சத்து அதிகம் உள்ளது
முருங்கைக் கீரை சூப் பருகி வந்தால் இரத்தம்
இல்லாதவர்களுக்கு இரத்தம் அதிகரிக்கும்.
காய்ச்சல் உள்ளவர்கள் குறிஞ்சாக் கீரையைச் சாப்பிட காய்ச்சல் சரியாகிவிடும்.
சர்க்கரை வியாதிக்கு குறிஞ்சாக் கீரை சாப்பிட்டால்
சர்க்கரை வியாதி அளவைக் கட்டுப்படுத்தும்.
முள்ளு முருங்கைக் கீரையுடன் ரொட்டியை
மூன்று நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சுச் சளி சரியாகிவிடும்.
சுக்கு, சித்தரத்தை, வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சிய அரிசி மாவுக் கஞ்சியைக் காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள்கள் சாப்பிட சளி சரியாகிவிடும்.
கம்பு ஊற வைத்து அதை முளை கட்டிய பிறகு சாப்பிட்டு வந்தால்
உடம்புக்கு வலு சேர்க்கும். மேலும் கம்பை வறுத்து அதில் இனிப்பைச் சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாயெல்லாம் மணமணக்கும்.
கேழ்வரகுப் புட்டும் வறுத்து அரைத்த எள்ளும்
இனிப்புடன் கலந்து சாப்பிட உடம்புக்கு நல்லது.
நாட்டுக் கோழிச் சூப்பில் நல்லெண்ணெய்
கலந்து குடித்தால் உடம்பில் உள்ள வலியெல்லாம் பறந்து போகும்.
இப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை உண்டு
ஆரோக்கியத்துடன் வாழ்வோமாக.
--------------------