நடு இரவில் திருச்சியிலிருந்து
கொடைக்கானலுக்குக் கிளம்பினோம்
ஒரு வேனில் ஐந்து
குடும்ப உறவினர்களோடு அந்த இனிமையான பயணம் ஆரம்பமானது
வேன் கிளம்பி சிறிது தூரம் சென்றவுடன் பிள்ளைகள், ‘பாட்டு பாட்டு’ எனப் பின்னாடி குரல் எழுப்ப, ரேடியோவில் பாடல் ஒலிக்க இரவுப் பயணம் தொடங்கியது
அதிகாலை மெல்ல மெல்ல விடியத் தொடங்கியது. கொடைக்கானல் மலையின் மீது வேன் சுற்றிச் சுற்றி வர, இயற்கை கொஞ்சும் அழகை இரசித்துக்கொண்டே குளு குளு கொடைக்கானல் இதோ வந்து விட்டோம்.
கொடைக்கானலின் அழகை
"ஆஹா " என்னவென்று சொல்வது இறைவனின் படைப்பல்லவா!
முதல் முதலில் வியூபாயிண்ட் பார்க்க சூப்பராக இருந்தது.
நீண்ட தூரம் நடக்க வேண்டி இருந்ததால் என்னால் நடக்க முடியவில்லை
ஓர் இடத்தில் உட்கார்ந்து
விட்டேன். சிறுது நேரம் கழித்து என் கணவர் என்னைத் தேடி வந்தார். இருவரும் இணைந்து
சுற்றிப் பார்த்தோம்.
நடந்து போனதில் பசியெடுக்கத்
தொடங்கியது. சுடச்சுட இட்லி. வடை சாப்பிட்டோம். அது அங்கிருந்த குளிருக்கு இதமாயிருந்தது.
அதை முடித்துவிட்டு
அறைக்குச் சென்று லக்கேஜ் எல்லாம் வைத்து விட்டு வெந்நீரில் ஒரு குளியலைப் போட்டுவிட்டு
அடுத்த இடத்திற்குக் கிளம்பினோம்.
ஊசியிலைக் காடு நோக்கிப் பயணம் வேன் புறப்பட அதற்கிடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இதோ ஊசியிலைக் காடு வந்து விட்டோம். ஊசியிலைக் காடு அருமையாக இருந்தது. அவ்விடத்தில் ஊசியிலைக் காடுகளே உச்சி மழை மேகங்களே... என விசு படத்தில் வரும் பாடலைப் பாடத்தோன்றியது.
மதியம் லஞ்ச் டைம் ஆயிருச்சு. ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனோம். அந்த ஹோட்டல் மரக்கட்டையால் அழகாக, சிறியதாக இருந்தாலும் ஹோட்டலைச் சுற்றி இயற்கையோடு சுடச்சுட சைவச் சாப்பாடு அருமையாக இருந்தது.
அதற்குப் பிறகு ஓர்
அழகான இடம் தொங்கு பாலம். கீழே குளம்போல் தண்ணீர் இருக்கும். சுற்றி இயற்கையோடு புகைப்படம்
எடுப்பதற்கு அழகான இடமாக இருந்தது.
இரவு நேர டின்னர் டைம் ஆயிருச்சு. ஹோட்டலில் சரியான கூட்டம்.
சிறிது நேரம் கழித்து ஒரு வழியாகச் சாப்பிட்டு முடித்து விட்டு அறைக்குச் சென்று ஓய்வெடுத்து விட்டு மறுநாள் காலையில் கிளம்பினோம்.
குணா குகைக்குப் பயணம். அங்கேயே சூடாக டிபன் முடித்து விட்டு
குணா குகைக்கு சென்றோம். இயற்கையோடு கொஞ்ச தூரம் நடைப் பயணம். இறைவனின் படைப்பு நிறைய உள்ளன. ஆனால் குணா குகையில் உள்ள மரத்தில் வேர்கள் அடர்த்தியாகவும்.அழகாகவும் இருந்தன.
மதியம் லஞ்ச் ‘தொப்பி வாப்பா பிரியாணி’ கடைக்குப் போனோம். கடையில் சரியான கூட்டம். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி (பிரியாணி. குஸ்கா) சாப்பிட்டு முடித்து விட்டு அடுத்த பயணம் தொடங்கியது.
அடுத்து படகு சவாரி
போனோம். சந்தோஷமாக இருந்தது.
அதனையடுத்து நடந்து ப்ரையாண்ட் பூங்கா சென்றோம்.
நடந்து போகும் வழியில் சூடாக சூப் குடித்துவிட்டுப் பூங்காவிற்குள் நுழைந்தோம்.
பூங்காவிற்குள் நுழைந்தவுடன் தொழுகை டைம் வந்ததால் அங்கே ஒரு இடத்தில் உட்கார்ந்து தொழ ஆரம்பித்தேன். தொழுது முடித்து ஸலாம் கொடுப்பதற்குள் ஒரே சத்தம்.
"என்ன ஏது என்று புரியவில்லை" அப்புறம்தான் தெரிஞ்சது.
அந்த கிரவுண்ட்டில் ஓடி. ஆடி. விளையாடிய சிறுவர்கள் யாருமே எனது கண்ணுக்குத்
தெரியவில்லை. அந்த அளவுக்குப் பனிமூட்டம். பக்கத்தில் யார் இருக்கிறார் என்பதே தெரியவில்லை.
அங்கே அதன் பின் நல்ல மழை பெய்தது.
அதற்குப் பிறகு அந்தப் பூங்காவைச் சுற்றிப் பார்த்து விட்டுச் சூடாக .டீ.குடித்து விட்டு, கொடைக்கானலை விட்டுத் திருச்சிக்குக் கிளம்பினோம்.
வரும் வழியில் இரவு
நேர டின்னர் முடித்துக்கொண்டோம். அத்தோடு எங்கள் இன்பச் சுற்றுலாவும் முடிந்தது .
---------------