சம்பல் (உ.பி.): நவ 26
முகலாயர்களின் சாம்ராஜ்ஜியத்தின் சாட்சிகளாகக் கட்டிடங்கள் பிரதிபலிக்கும் மாநிலம் உத்திரப் பிரதேசம். RSS,பாஜகவிற்கு இந்தியாவில் பதற்றமான அரசியல் களத்தை உருவாக்கத் தேவை உள்ளபோது உ.பி மாநிலத்தை ஊற்றாகக் கண்களாக இங்குள்ள மசூதிகளை வைத்து மதப் பிரச்சினைகளை நாடு முழுவதும் கொண்டுசெல்வார்கள்.
இதற்கு நீதிமன்றம்,நீதிபதிகளையும் தங்களுக்குச் சாதகமான துணையாக வைத்துக்கொள்வதுண்டு.
மோடியின் பிஸினஸ் பினாமியான அதானி குழுமம் மீது அமெரிக்கக் குற்றவியல் துறை சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக தன்னுடைய ஆட்சிக்கு ஆபத்து என பாஜக உணரும்போதெல்லாம் அவற்றை இந்திய மக்கள் அறிந்துவிடக் கூடாது எனத் திசை திருப்பும் வேலையைச் செய்வார்கள்.
இதற்கு முஸ்லிம்களின் மசூதிகள் நிறைந்த மத பிரச்சனைகளுக்கு கை கொடுக்கும் பஞ்சமில்லாத பூமியாக திகழும் உத்தரப் பிரதேசம். நீதித்துறையை வைத்துக்கொண்டு RSS,பாஜக இவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் அகழ்வு ஆய்வு என்ற பெயரில் குழிதோண்டிப் பார்க்கும் வேலை.
பாஜக பாபர் மசூதி கதையை இனி இழுக்கமுடியாது என அறிந்து கியான்வாபி மசூதி, அடுத்து சம்பல் நகரில் உள்ள ஜமா மசூதி என வரிசை படுத்தியுள்ளார்கள்.
இந்த மசூதி கட்டப்படுவதற்கு முன்பாக அந்த இடத்தில் இந்து கோயில் இருந்ததாகவும்,எனவே அந்த இடத்தில் ஆய்வு நடத்தி உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டுமென கூறி நீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்தவர் ஒருவர் வழக்கு தொடர்வதும்.இதையடுத்து அந்த மசூதியில் ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுவதும் நாட்டில் இது முதல் முறை அல்ல.
இதைத்தொடர்ந்து, தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதற்காக சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதிக்குச் சென்றுள்ளனர். திட்டமிட்டு சதிவேலைகள் செய்யும் பாஜக அரசு. அங்குக் கூடியிருந்த முஸ்லிம்கள் மசூதியில் ஆய்வு நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் மசூதியை ஆய்வு செய்வதில் அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் உறுதிகொண்டுள்ளனர். இதன் காரணமாகவே போலீஸாருக்கும்,முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட அகழாய்வு உத்தரவே முதன்மை காரணம் ஆகும்.
உ.பி முதல்வர் யோகி ஆதித்தனார் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் காட்டுமிராண்டித் தனமான துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் நவீத்,நயீம்,முகம்மது அன்சாரி பிலால் என மூன்று முஸ்லிம்கள் அநீதியாக போலிசாரால் சுட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
மசூதிக்கு முன்பு இந்து கோயில் இருப்பதாக வழக்கு தொடர்வதும், இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றம் ஏற்று அவற்றை அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிடுவதும் தொடர்கதையாகி விட்டது.
பாபர் மசூதியை இடித்தது போன்று நாடெங்கும் உள்ள மசூதிகளையும் தரைமட்டம் ஆக்குவது என்பதே பாஜகவின் திட்டம் எனில் இதற்காக நீதிமன்றம்,தொல்லியல் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டும் ஏதாவது ஒரு வகையில் மதக் கலவரத்தைத் தூண்டுவதை வாடிக்கையாகக் கொண்டுவருகிறது மோடியின் அரசு இயந்திரங்கள்.