திருவாரூர் டிச 06
1992 டிசம்பர் 06 அன்று இதே நாளில் தான் பாசிசக் கும்பல் ஒன்று சேர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
பாபர் மசூதிக்குச் சொந்தமான இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ள நீதிமன்றமும் அனுமதித்தது.
இதைத் தொடர்ந்து இந்தத் தினத்தை இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகக் கருதி பாசிசத்திற்கு எதிராகத் தங்களுடைய எதிர்ப்பை ஜனநாயக ரீதியாக அனுசரித்து வருகின்றனர்.
எனவே டிசம்பர் 06 அன்று மாவட்ட தலைநகரான திருவாரூரில் SDPI கட்சியினர் மற்றும் தமுமுக,மமக கட்சியினர் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
SDPI கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் தோழர் தியாகும்,
தமுமுக,மமக கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மமக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ப.அப்துல் சமது கண்டன உரை நிகழ்த்தினார்கள். இதில் பெரும் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.