திருவாரூர் டிச 07
RMS அஞ்சல் பிரிப்பகம் சேவையை மூடுவதைக் கண்டித்து திருவாரூர் தலைமை தபால் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நாகை தொகுதி நாடாளுமன்றம் உறுப்பினர் வை.செல்வராஜ்,திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
பல ஆண்டுகளாக இயங்கிவரும் திருவாரூர் தலைமை தபால் பிரிப்பகம் பதிவுத் தபால், விரைவு தபால், அழைப்பிதழ்கள், பார்சல்கள் எனக் குறைந்த செலவில் அனுப்புவதற்கு இப்பகுதி வர்த்தகர்களுக்கும், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என அனைத்துத் தரப்பட்ட பொதுமக்களுக்கும் அஞ்சல் சேவையை வழங்கிவருகிறது.
இந்தத் தபால் பிரிப்பகத்தை ஒன்றிய பாஜக அரசு மூடப்படும் வேலையைச் செய்து வருவதை அறிந்து 24 மணிநேரத்தில் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தபால் பிரிப்பகம் அலுவல் பொருட்களை எடுத்துச்செல்வதை அதிகாரிகள் நிறுத்தியதை அடுத்துக் கண்டன ஆர்ப்பாட்டமாகத் தற்போது நடத்தியுள்ளோம்.
இவற்றை மூடும் பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்பதாகவும், இந்தத் தபால் பிரிப்பகம் இங்கு தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இதற்கான அனைத்து முயற்சிகளும் செய்து வருவதாக நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து அரசியல் கட்சியினர், வர்த்தகர்கள்,தொழிற்சங்கத்தினர், சமூக அமைப்பினர் கலந்துகொண்டனர்.