திருவாரூர் டிச 11
மத்திய பாஜக மோடி அரசின் கடைகளின் வாடகை மீதான 18% வரி விதிப்பைத் திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரமைப்பு சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக VKK.ராமமூர்த்தி மாவட்டத் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
L.செந்தில்நாதன்,சு.ஞானசேகரன், M.ஆதப்பன், SMT.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏராளமான இளைஞர்கள் படித்த கல்விக்கு ஏற்ற அரசு வேலைகள் நாட்டில் கிடைப்பதில்லை, வேலையில்லாத திண்டாட்டம் அதிகளவில் இருக்கும்போது இன்றைய இளைஞர்கள் வாடகை கடைகளை நம்பிதான் தங்களுக்குத் தெரிந்த சிறு வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர் தங்களுக்கான வருமானத்தைப் பெற்றுவரும் இவர்கள் மீதும்,
இதேப்போன்று பெரும்பாலான பழக்கடை,பூக்கடை வைத்து அன்றாடம் தொழில் செய்யும் சிறு வணிகர்களும் தங்களுடைய கடைகளின் வாடகையின் மூலம் 18% வரி செலுத்தும் சுமையைச்சுமத்தியுள்ளது மத்திய அரசு. எனவே கடைகளின் வாடகை மீதான வரி விதிப்பை திரும்ப்பெறவேண்டும்.
பன்னுக்கு 5% குறைந்த வரியும்,கிரீம் பன்னுக்கு அதிகபட்சமான 18% GST வரி விதிப்பு சர்ச்சைகளை உருவாக்கியது. GST கவுன்சில் இதுவரையும் ஐம்பது தடவைக்கும் மேல் கூடிய போதும் வரி விதிப்பு முறைகளில் குளறுபடிகளுடன் உள்ளது.
மேலும் வணிகர்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் அந்நியநாட்டு ஆன்லைன் வர்த்தகத்தைத் தடைசெய்திட வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
இதில் திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள்,மற்றும் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர்,கொரடாச்சேரி, லெட்சுமாங்குடி,பேரளம்,அம்மையப்பன்,
எரவாஞ்சேரி, குடவாசல், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளிலிருந்தும் ஏராளமானவர்கள் வணிகர்கள் வாடகை கடைகளுக்கு 18% GST வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இறுதியாக வர்த்தகச் சங்கம் பேரமைப்பு மாவட்ட துணைத்தலைவர் S.மதிவாணன் நன்றி தெரிவித்தார்.