2024 டிசம்பர் 15
காலம் மாறியது காட்சிகளும் மாறியது புகழ்பெற்ற பம்பாய் என்கிற மும்பை நகரம் உள்ள இந்தியாவின் முக்கிய மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
20 ஆண்டுக்கு முன் மகாராஷ்டிராவில் சிவசேனாவின் கட்சியின் கூட்டணியின் ஒட்டியிருந்தது பாஜக கட்சி.
அன்றைய மாநில மூத்த தலைவர் பிரமோத் மகாஜனிடம் சிவசேனாவின் கீழ் இருப்பது ஏன் என நிகழ்ச்சி ஒன்றில் கேட்டபோது,அன்று அவர் கூறியது. அரசியலில் நீங்கள் உங்களின் நேரத்தை மிகச் சரியாகப் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
மத்தியில் எங்கள் ஆட்சியில் இருக்கலாம் ஆனால், இப்போது எங்களுக்கு தாக்கரேக்கள் கூட்டணிகள் தேவையுள்ளது.
ஒரு நாள் எங்களுக்குச் சிவசேனா தாக்கரேக்கள் தேவைப்படாமல் போகலாம்.அப்போது எங்களின் அரசியல் சாணக்கியத்தை அன்று அறிவீர்கள் என்றார். இவற்றைத் தான் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் நடத்தி முடித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
இதையடுத்து,புதிய முதல்வராக, பாஜக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றுள்ளார். RSS தலைமையகம், நாக்பூரின் பூர்வீகமும், குடும்பப் பின்னணியும் தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு இயல்பிலேயே RSS நெருக்கத்தைக் கொண்டவர்.
இந்தப் பின்னணியில் 2019-ம் ஆண்டு பேரவைத் தேர்தலை ஒருங்கிணைந்த சிவசேனாவுடன் இணைந்து சந்தித்த ஃபட்னாவிஸ், அந்தத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக இருந்தும், உத்தவ் தாக்கரேவுடன் இணங்கி ஆட்சி அமைப்பதில் தோல்வியடைந்ததால், எதிர்க்கட்சித் தலைவராகப் பேரவையில் அமர்ந்தார் அப்போது ஃபட்னாவிஸ் சொல்லிய வார்த்தை வசீகரமானது.எனது நிலத்தில் நீர் பின்வாங்கிவிட்டதென எனது கரைகளில் கூடாரமிடாதே, நான் பெருங்கடல், நான் மீண்டும் வருவேன் என்றார்.
மகாராஷ்டிராவில் பாஜக வேரூன்ற தடையாய் இருப்பது தேசியக் கட்சியான காங்கிரஸ் அல்ல, கூட்டணிக் கட்சிகளே, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் பிளவுபடுத்தி மிகச் சரியாக அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளார் ஃபட்னாவிஸ்.
பதவி ஒன்றே ஆளுமைக்கு உதவும் என்பதை உணர்ந்து ஆரம்பத்தில் கூட்டணியில் துவங்கி,பார்ட்,பார்டாக கூட்டணி கட்சிகளை உடைக்கும் அரசியலை முன்னெடுக்க. ஏக்நாத் ஷிண்டே வைத்து சிவசேனா கட்சியையும்,அஜித்பவாரை வைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்து சந்து இடுக்கில் ஊடுருவி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது பாஜக கட்சி. கூடாநட்பு கேடாய் முடியும் என்பத்தையை உணர்த்தி உள்ளது மஹாராஷ்டிராவின் அரசியல்.
இதேபோல் தான் இந்தியாவில் அதிக வளமும்,வருமானமும் உள்ள தமிழ்நாட்டைக் கைப்பற்றுவது பாஜகவின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
மகாராஷ்ட்டிராவில் கையாண்ட இதே தந்திரத்தைத் தமிழ்நாட்டிலும் முன்பே துவங்கிய பாஜக.தமிழ்நாட்டில் MGR ஆரம்பித்த திராவிடக் கட்சியில் ஒன்றான அதிமுகவை நான்கு அணிகளாக பிரித்து வெற்றி கண்டுள்ளது. இப்போது மற்றொரு திராவிடக் கட்சியான திமுக மட்டுமே மீதம் உள்ளது. இவற்றிலும் பிளவு படுத்த பல சினிமா நடிகர்களை வைத்து தனது சாணக்கியத்தை அவ்வப்போது பாஜக செய்து வந்தாலும்.
பெரியாரின் மண், திராவிடம் என்ற கொள்கை சொல்லே அவர்களை அச்சுறுத்துகிறது. இவற்றை தமிழர்கள் மறந்திடும்போது ஆட்சியை படிப்பதற்காக பாஜகவின் இலக்கு இலகுவாகிவிடும்.