கூத்தாநல்லூர் டிச 20
நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து அவமதித்துப் பேசியதைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், திருவாரூர் மாவட்டச் செயலாளர் A.குத்புதீன் தலைமையில் லெட்சுமாங்குடியில் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவர் M.முஜிபுர் ரகுமான், தலைமைச் செயற்குழு உறுப்பினர் E.பஜிலுல் ஹக், கூத்தாநல்லூர் நகர CPI செயலாளர் முருகேஷ், மக்கள் அதிகாரம் மாவட்டத் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
ஒன்றிய பாஜக அரசு நடப்பு நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்ற முடியாமல் போனதை அடுத்து சட்டமேதை புரட்சியாளர் அப்பேத்கர் அவர்களை அவமதித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது. அமித்ஷாவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மோடி அரசு நீக்கம் செய்யப்பட வேண்டும் எனப் வலியுறுத்தினர்.
மேலும் நாட்டில் வளங்களைக் கொள்ளையடிக்க அதானி, அம்பானி நிறுவனங்களுக்குச் சாதகமான சூழ்நிலையை பாஜக அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. தரமில்லாத தஞ்சை,நாகை சாலையில் கோவில் வெண்ணியில் டோல்கேட் அமைத்து வாகன வரி வசூல் செய்வது டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.
மாநகராட்சி, நகராட்சியின் அதிகாரம் போன்று மாநில அரசுகளில் சுயாட்சியைப் பறித்து அதன் அதிகாரங்களைக் குறைத்து வருவதாகவும் ஒன்றிய பாஜக மோடி அரசின் மீது குற்றச்சாட்டிப் பேசினர்.
முன்னதாக நகரச் செயலாளர் நைனாஸ் முகம்மது அனைவரையும் வரவேற்றார், H.நவாஸ் தொகுப்புரை வழங்கினார்.
இதில் மாவட்ட நிர்வாகிகள் துணை நிர்வாகிகள் ஒன்றிய நகர, கிளை நிர்வாகிகள்,என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்
இறுதியாக கூத்தாநல்லூர் நகரத் தலைவர் சாதிக்கான் நன்றி தெரிவித்தார்.