திருவாரூர் டிச 31
கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை, அடுத்து திருவாரூரில் உள்ள திரு.வி.க.அரசு கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிக்குப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். இந்த கொடூரச்செயல் செய்த பேராசிரியரைக் கைது செய்திடவேண்டியும்,
இவர்களைத் துறை ரீதியான நடவெடிக்கை எடுக்கக் கோரியும்,தமிழகம் முழுவதும் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவேண்டும் என வலியுறுத்தி Democratic Youth Federation Of India, All India Democratic Women's Association, Students Federation of India அமைப்பினர் திருவாரூர் ரயில் நிலையம் முன்பாகக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.