அல்ஜெஸிரா
Jan 03 2025
கலை இலக்கியம்
கருத்துச் சுதந்திரம்
முந்தைய தலைமுறைகளுக்கு கிடைக்காத வாய்ப்பு இந்த தலைமுறைகளுக்கு கிடைத்திருக்கிறது... தமது கவிதைகளையோ கதைகளையோ படைப்புகளையோ வெளிப்படுத்தி அதற்கானபெரிதாக கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை...
அன்றைய காலகட்டத்தில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ள பெரிதாக தளங்கள் அமையவில்லை.. நண்பர்களுக்கிடையில், ஊர் டீக்கடையில், பெண்கள் கூடும் இடங்களில் என மனிதர்கள் தங்களின் பகிர்ந்துணர்வுகளை நிகழ்த்திக்கொண்டனர். அதுவும் பெருவாரியான விசயங்களுக்கான விவாதங்களாக இருந்திருக்குமானால் வாய்ப்பில்லை... ஊர் சார்ந்தோ, அல்லது நாளிதழ்களில் வெளியாகும் செய்திகள் சார்ந்தோ அமைந்திருக்கும்...
ஆனால் காலமாற்றத்தில் அப்படியில்லை. இணையத்தின் பயன்பாடு கூடி , பொதுத்தளங்கள் பெருகியிருக்கின்றன.. நொடியில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து, பேசுபொருளாக மாறிவிடும் சூழல் அமைந்துவிட்டது. இது ஆரோக்கியமானதா...?! அல்லது ஆரோக்கியமற்றதா ...?! என்பதெல்லாம் பயனர்களின் செயல்கள் பொருத்து... கருத்துச்சுதந்திரம் என்ற பேர்வழியில் பெண்களை அப்யூஸ் செய்வது. அடுத்தவர்களின் வாழ்வில் கல்லெறிவது. ஒரு விசயம் சார்ந்து எவ்வித புரிதலில்லாத பொழுதும், தேவையில்லாத விசயங்களை பேசுவது என அத்தனை அநாகரிகங்களும் நடந்துகொண்டிருக்கிறது... மனிதர்களின் தரமற்ற குணாதிசயங்கள் வெளிப்படும் போது, உள்ளூர வெளியுலகம் சார்ந்த பயங்களும் பெருகிவிட்டன... நமது கருத்துச்சுந்திரம் எதுவரை என்ற புரிதல் வேண்டும்... நாகரீகமான முறையில் எதிர்கருத்தை தெரிவிக்கும் எல்லைகள் தெரிந்திருக்க வேண்டும்.. யாரின் அந்தரங்க வாழ்வைப்பற்றிப் பேசுவதற்க்கும் விமர்சிப்பதற்கும் நமக்கு உரிமை இல்லை என்பது வரை தெரிந்து நடக்கப்பழகுவோம்..
கால மாற்றங்களுக்கு ஏற்றவாறு , நமது எல்லைகளை தீர்மானித்து நாகரீகமான நடைபோடுவோம்...