அத்திக்கடை ஜன 26.
திருவாரூர் மாவட்டம் அத்திக்கிடையில் 76 ஆம் ஆண்டு இந்தியக் குடியரசு தின விழா தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.
அத்திக்கடை ஊராட்சி மன்றம் சார்பாகவும், ஊராட்சி ஆண்கள்,பெண்கள், துவக்கப்பள்ளி மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி,அரசு மருத்துவமனை, மற்றும் SDPI கட்சி அலுவலகம்,தமுமுக, மமக கட்சி அலுவலகம், மனிதநேய ஜனநாயகக் கட்சி அலுவலகம், ஆகியவற்றில் தேசியக்கொடியை ஏற்றிச் சிறப்பிக்கப்பட்டது.
இதில் ஜமாத் தலைவர் A.A.அப்துல் முகம்மது, துணைத் தலைவர் ஹலிக்குள் ஜமான், செயலாளர் சுல்தான் ஆரிப்,
ஊராட்சி மன்றத் தலைவர் பாத்திமா பாவா பகுருதீன், துணைத் தலைவர் MMY ஜெஹபர் சாதிக், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நிலாபுதீன், மாநில ஆசிரியர் மன்ற கழகத் தலைவர் ரவி,
டாக்டர் ரெங்கராஜன், வழக்கறிஞர் சதாம் உசேன், ஊராட்சி செயலர் கலைராஜா, பால்ரார் ராஜா,அப்துல் காதர், அப்துல் ரகுமான்,சொய்புல்லாஹ்,சைபுதீன், பாரூக்,ஜெக்கிரியா,சேக் தாவுது,பீர் முகமது, மன்சூர்,சிராஜ்,சலீம், ஹலில்,யூசுப்தீன்,
மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,
ஆசிரியர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் எனப் அனைவரும் கலந்து கொண்டனர்.
இறுதியாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்குத் தேர்வுக்குத் தேவையான எழுதுப்பொருட்களை முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பாகவும்,SDPI கட்சி சார்பாகவும் வழங்கப்பட்டது.