அத்திக்கடை முகம்மது நசூர்தீன் DME.,
Feb 01 2025
செய்திகள்
புதுடெல்லி ஜன 30
இந்தியாவில் உள்ள மசூதிகள், தர்காக்கள், மதரஸாக்களுக்கு இஸ்லாமியர்கள் மட்டுமே நிலத்தைத் தானமாக முஸ்லிம்கள் பயன்படுத்திக்கொள்ள வழங்கியுள்ளனர். இவைகள் தான் வக்பு வாரிய சொத்துகள் என்று அழைக்கப்படுகிறது. இதற்காக 1954ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டது.
இதற்கிடையே தற்போதுள்ள மத்திய அரசு இந்தச் சட்டத்தைத் திருத்த முடிவு செய்தது. இதற்கான மசோதாவை முன்மொழிந்து பாஜகவினரின் 40 மோசடியான விருப்பத்திருத்தங்கள் கொண்டுவர முயன்றுள்ளனர். இந்த மசோதா வக்பு வாரியத்தின் அதிகாரத்தைக் குறைத்து வக்பு நிலங்களை அபகரிக்கக்கூடிய வகையில் இருப்பதாகக் கூறி காங்கிரஸ்,திமுக, தேசியவாத காங்கிரஸ், என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் நடந்து பின்பு இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் காரசார விவாதங்கள் நடந்தன. இருந்தும் மோடி அரசு எந்த எதிர்ப்பையும் எப்போதும் போல் கவனத்தில் கொள்வதில்லை.
திட்டம் போட்டு அபகரிக்கும் வழிமுறையை வெவ்வேறு வடிவங்களிலும் உருவாக்குபவர்கள் பாஜகவினர்.காங்கிரஸ் ஆட்சியில் பாபர் மசூதியை இடித்து இடத்தைக் கைப்பற்றி ராமர் கோயில் கட்டினர்.அடுத்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான வக்பு நிலங்களை இந்தச் சட்டத்தின் மூலம் முஸ்லிம்களிடம் நேரடியாகவே அபகரிக்க வக்பு திருத்தச் சட்டம் என்று பெயரில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ளார்கள். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிந்துரைநிராகரித்து வக்பு திருத்தச் சட்டத்தைச் சபாநாயகர் அவர்களிடம் வழங்கி இருப்பது மோடி அரசின் மிகப்பெரிய அநீதியாகும்.
முஸ்லிம்களின் மசூதி இருந்த இடத்தை அபகரித்துக் கொள்வது, பொது சிவில் சட்டம் எனச் சிறுபான்மை மக்கள் மீது தொடர்ந்து அதிகார மிரட்டல்களை பாஜக ஆளும் மாநில அரசுகளும்,ஒன்றிய அரசு என்ற பெயரில் சங்பரிவார மற்றும் பாஜகவினர் செய்து வருகின்றனர்.