தஞ்சாவூர் பிப் 02
தஞ்சாவூர் திலகர் திடலில் SDPI கட்சி நடத்திய வக்பு உரிமை மீட்பு மாநாடு பிரமாண்ட ஏற்பாடுகளுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
SDPI கட்சி நடத்தும் வக்பு உரிமை மீட்பு மாநாடு தன் இலக்கில் வெற்றி அடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.அல்லாஹ்வுக்கு உரிமையாக்குதல் என்று பொருளுடைய இறைப்பணிக்காக இஸ்லாமியர்கள் தங்கள் நிலங்களை நன்கொடை கொடுத்திருக்கிறார்கள். எளியவர்கள்,பெண்கள், குழந்தைகள் என நன்மைகளுக்காகத் தங்களின் சொத்துக்களை மன்னர்கள் காலம் முதல் இன்றுவரை ஏராளமான நன்கொடைகளை இஸ்லாமிய மக்கள் வழங்கியதோடு அரசு கல்லூரிகள்,அரசு பள்ளிக்கூடம் என இந்த இடங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு செயல்படுகிறது.
இஸ்லாமியர்களும் இந்துக்களும் சகோதரர்கள் நல்லிணக்கமாக வாழுகிறார்கள். இப்படி வாழச் சொன்ன ஒரே காரணத்திற்காக அன்று காந்தி சுட்டுக் கொண்டனர் RSS கும்பல். இன்று இஸ்லாமியர்களின் ஏராளமான வக்பு சொத்துகளைக் கையகப்படுத்தி விட வேண்டும் என்று மோடி அரசு முடிவு செய்தியிருக்கிறது. இஸ்லாமியர்களுக்கு இந்த மண்ணில் இடம் இல்லை என்பது இவர்களின் கோட்பாடு.அதனால் தான் இன்றைக்கு இஸ்லாமியர்களாக இந்தியாவில் வாழ்வது என்பது மிகவும் கடினம் என்பதாகவும், வடமாநிலங்களில் அச்சத்துடன் வாழக்கூடிய நிலைமையை உருவாக்கி இருக்கிறார்கள். காவல்துறை, கல்வித்துறை, நீதித்துறை என அனைத்தும் RSS துறையாக மோடி ஆட்சியில் மாறி வருகிறது. தஞ்சையில் மிகப் பெரிய திலகர் திடலில் SDPI கட்சி நடத்திய வக்பு உரிமை மீட்பு மாநாடு கூடிய மக்கள் அலையால் சிறிய திடலானது எனத் இந்த மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திரு.ஜெயராம் இவ்வாறு உரையாற்றினார்.
மேலும் SDPI கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், பாஸ்டர் வி. மார்க், S.S.பாக்கர் அலி, L.அபூபக்கர் சித்தீக் ஆகியோர்கள் வக்பு உரிமை மீட்பு மாநாட்டில் எழுச்சியுரையாற்றினர். இதில் ஏராளமான SDPI கட்சித் தொண்டர்கள், முஸ்லிம் பொதுமக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.