மதரஸா சுபுலுஸ் ஸலாம் 11 வது பட்டமளிப்பு விழா 02-02-2025 ஞாயிற்று கிழமை மாலை முதல் இரவு வரை மிகச் சிறப்பாக மஸ்ஜித் ஜாவித், அண்ணா நகரில் வைத்து நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக மதிய விருந்திற்குப் பின் மறைந்துவிட்ட ஆசிரியர் மற்றும் நிர்வாகிகளுக்காக குர்ஆன் ஓதி ஈஸால் தவாபு செய்யப்பட்டது.
பிறகு 3 மணி முதல் 5 மணி வரை முன்னால் மாணவர்களின் கலந்துரையாடல் நடைபெற்றது. 1990 முதல் 2024 வரை மதரஸா சுபுலுஸ் ஸலாமில் ஓதிய முன்னால் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பசுமையான தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மதரஸாவின் ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் தலைமை இமாம் M.K. அலாவுத்தீன் பாகவி அவர்களும் அல்ஹாஜ் M.முஹம்மது யூசுப் (துணை தலைவர்) அவர்களும் முன்னால் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆசிரியர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் முன்னால் மாணவர்கள் சார்பாக அன்பளிப்பு வழங்கப்பட்டு பொன்னாடையும் போர்த்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து 5 மணி முதல் 6 மணி வரை முன்னால் மாணவர்களின் சொற்பொழிவு தமிழ் மற்றும் உர்து மொழியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த முன்னால் மாணவர்கள் அப்பாஸ் காஷிஃபி,ஹஸன் காஷிஃபி, காஜா காஷிஃபி மற்றும் யாசிர் அரஃபாத் யூஸுஃபி ஆகியோருக்கும் வந்திருந்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றி கூறப்பட்டது.
மக்ரிபிற்குப்பின் பட்டமளிப்பு விழா தொடங்கியது. இந்த அமர்விற்கு அல்ஹாஜ் L.K.S.செய்யது அஹ்மது
தலைவர் : மஸ்ஜித் ஜாவித்
அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார்.
அல்ஹாஜ் K.அலாவுத்தீன், IAS (Rtd) (துணை தலைவர்),
அல்ஹாஜ் இல்யாஸ் சேட் (துணை தலைவர்),
அல்ஹாஜ் M.முஹம்மது யூசுப் (துணை தலைவர்),
அல்ஹாஜ் W.S.ஹபீபுல்லாஹ் (பொருளாளர்),
அல்ஹாஜ் H.அப்துல் கரீம் (இணைச் செயலாளர்)
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆரம்பமாக மதரஸாவின் பேராசிரியர்
மவ்லானா அல்ஹாஃபிழ் B.அப்துல் ஹலீம் மளாஹிரி ஹழ்ரத் அவர்கள் இறைமறை ஓதி துவக்கி வைத்தார்கள். அதன் பின் மதரஸாவின் பேராசிரியர்
மவ்லானா அல்ஹாஃபிழ் A.சைஃபுத்தீன் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள் அரபி பைத் படித்தார்கள்
அல்ஹாஜ் K.U.அப்துல்லாஹ்
சேர்மென் : மத்ரஸா சுபுலுஸ் ஸலாம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மவ்லானா அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
M.K.அலாவுத்தீன் பாகவி ஹழ்ரத்,தலைமை இமாம்: மஸ்ஜித் ஜாவித்,
மவ்லானா அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
M.முஹம்மது இப்ராஹீம் பாகவி ஹழ்ரத்
பேராசிரியர்: மத்ரஸா காஷிஃபுல் ஹுதா, சென்னை மற்றும்
மவ்லானா அல்ஹாஃபிழ் அல்ஹாஜ்
S.யூசுப் சித்தீக் மிஸ்பாஹி ஹழ்ரத்
தலைமை இமாம்: மக்கா மஸ்ஜித் மவுன்ட் ரோடு, சென்னை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மதரஸாவின் ஆண்டறிக்கையை ஆசிரியர்
மவ்லானா அல்ஹாஃபிழ் J.ஆஷிக் ரஸூல் காஷிஃபி ஹழ்ரத் அவர்கள் சமர்ப்பித்தார்.
இறுதியாக அல்லாமா அமீரே ஷரீஅத் (தமிழ்நாடு) மவ்லானா அல்ஹாஜ்
M.அப்துல் மஜீது பாகவி ஹழ்ரத் கிப்லா தாமத் பரகாதுஹும்
முஹ்தமிம்: மத்ரஸா காஷிஃபுல் ஹுதா, சென்னை
அவர்கள் ஹிஃப்ழ் முடித்த 14 ஹாஃபிழ்களுக்கு
ஸனது வழங்கி துஆ செய்தார்கள்.
அல்ஹாஜ் H.அப்துல் கரீம் (இணைச் செயலாளர்) அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.
சுமார் 600 ஆண்களும் பெண்கள் பகுதியில் 300 பேரும் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இரவு விருந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஹாஃபிழ்கள் தலைவருடன்
பட்டம் பெற்ற ஹாஃபிழ்கள் 14 பேர்.
(2023, 2024 1444-1445)
1.ஹாஃபிழ் A.அக்ரம் அலி த/பெ அஷ்ரப் அலி,சென்னை.
2.ஹாஃபிழ் M.முஹம்மது அனஸ் த/பெ முஹம்மது தமீம்,சென்னை.
3.ஹாஃபிழ் J.K.அப்சல் அப்துல் கரீம் த/பெ கலிகு ஜமான்,பள்ளப்பட்டி.
4.ஹாஃபிழ் K.நூஹ் காஷிஃப் த/பெ காமில்,
காயல்பட்டிணம்
5.ஹாஃபிழ் T.A.முஹம்மது முஜம்மில் த/பெ அப்துல் வஹ்ஹாப்,பள்ளப்பட்டி.
6.ஹாஃபிழ் M.J.ஷாஹித் த/பெ முஹம்மது அலி ஜின்னா,
நாகர்கோயில்.
7.ஹாஃபிழ் N.நயிஃபுத்தீன் த/பெ நாசருத்தீன்,தஞ்சாவூர்.
பட்டம் பெற்ற ஹாஃபிழ்கள் (2024 - 2025 1445-1446)
8.ஹாஃபிழ் A.மஹ்தி த/பெ அப்துல் கரீம்,ஈரோடு.
9.ஹாஃபிழ் A.ஹாமிது மரைக்காயர் த/பெ மௌலவி அப்துஸ் ஸமது ரஷாதி,பரங்கிபேட்டை.
10. ஹாஃபிழ் S.அப்துல் ஹாதி த/பெ சையத் அப்துல் காதர்,பரங்கிபேட்டை.
11. ஹாஃபிழ் A.முஹம்மது ஷம்சுர் ரஹ்மான் த/பெ அப்துர் ரஹ்மான்,சென்னை.
12. ஹாஃபிழ் J.முஹம்மது அர்ஷத் ஜலீல் த/பெ ஜமீல் பாஷா,சென்னை.
13. ஹாஃபிழ் S.முஹம்மது நவ்ஃபல் த/பெ சிராஜுத்தீன்,அதிராம்பட்டிணம்.
14. ஹாஃபிழ் M.முஹம்மது ரஸீன் த/பெ மைதீன் பிச்சை,
திருநெல்வேலி.