2025 பிப் 12
பொதக்குடி பெரிய பள்ளிவாசல் பெண்கள் தொழுகைக் கூடம் புதிய கட்டிடத் திறப்பு விழா நிகழ்ச்சி புதன் கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாநிலத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொதக்குடி AM.தாஜூத்தீன் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துரை.
சமூக நல்லிணக்கத்திற்குப் பெயர் போன எங்கள் ஊரின், சுமார் 450 வருடத்துக்கும் மேற்பட்ட மிகவும் பழமை வாய்ந்த முதல் பள்ளிவாசல் வளாகத்தில், பெண்கள் தொழுகைக் கூடம் புதிய கட்டிடம் கொடைவள்ளல் A.குத்புதீன் அவர்களால் வக்ஃப் செய்யப்பட்டுள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ் அக் கொடையை ஏற்றுக் கொள்வானாகவும்.
இனி வருங்காலங்களில், ஐவேளை, வெள்ளிக் கிழமை, தராவீஹ், பெருநாள் எனப் பள்ளிவாசலுக்கு வந்து தொழ விரும்பும் பெண்களைத் தடுக்காதீர்கள் எனும் நபி மொழிக்கேற்ப, பள்ளிவாசலின் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிக்கு ரப்புல் ஆலமீன் அருளியிருக்கும் வெற்றியான, நிலையான மறுமை வாழ்வின் சிறப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் ஸதக்கத்துல் ஜாரியா எனும் சங்கிலித் தொடரான கண்ணியம் பொருந்திய அமலாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ், நன்கொடையாளருக்கும், முயன்ற நிர்வாகத்துக்கும், சிறந்த முறையில் அரங்கம் அமைத்து தந்த கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் இந்த நற்பணி செய்திடப் பரிந்துரைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இம்மை,மறுமை வாழ்வைச் சிறப்பாக்கித் தருவானாகவும் எனும் பிரார்த்தனையோடு நல்வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.