திருவாரூர் பிப் 27
மனிதநேய மக்கள் கட்சி சார்பாக வக்ப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் M.முஜிபுர் ரகுமான் அவர்கள் தலைமையில் திருவாரூர் ரயில் நிலைய முன்பாக நடைபெற்றது.
மத்திய பாஜக அரசு இந்திய மக்களை மத ரீதியாகப் பிளவுபடுத்தியும், முஸ்லிம்களின் உரிமைகளை பறித்து வருவதோடு, திருத்தச் சட்டங்கள்,புதிய திட்டங்கள் என்று கொண்டுவருகிறோம் என நாட்டு மக்களுக்குப் பல இன்னல்களை உருவாக்கி வருகிறது மோடியின் ஒன்றிய அரசு.
இஸ்லாமியச் சமுதாயத்தைச் சேர்ந்த பெரும் செல்வந்தர்கள் முஸ்லிம்களின் நலனுக்காகக் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காகவும், வழிப்பாட்டு இடங்கள் அதன் சார்ந்த சொத்துக்களையும் வக்பு சொத்தாகக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
ஆனால் அவற்றை அபகரிக்கும் கெட்ட உள்நோக்கத்தோடும், மத்தியில் ஆளும் பாஜக அரசு இவற்றை வெளிப்படையாகப் பிடுங்குவதற்கான திட்டங்களை வக்பு திருத்த சட்டம் என்ற பெயரில் நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் நாட்டில் முஸ்லிம்களின் உரிமைகளை முழுவதுமாக பறித்துவிடவும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இவற்றை எங்களின் வலிமையான எதிர்ப்புகளின் மூலம் முறியடிப்போம் என்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.
இதில் தஞ்சை I.M. பாதுஷா,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன் வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன் மற்றும் வெங்கலம் A. ஜபருல்லா மற்றும் தமுமுக,மமக கட்சியினர்,என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக A.ஹலில் ரகுமான் அவர்கள் நன்றி தெரிவித்தார்.