திருவாரூர் மார்ச் 05
SDPI கட்சியின் அகில இந்தியத் தலைவர் M.K. ஃபைஸியை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக மாவட்டத் தலைவர் மாஸ் அப்துல் அஜீஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ஃபாயிஜா சபிக்கா SDPI மாநில செயற்குழு உறுப்பினர்,தஞ்சை மண்டலத் தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆணவத்தில்,RSSயின் தூண்டுதலால் பாசிச பாஜக அரசு நாட்டில் மிக மோசமான அரசியல் சூழ்நிலையில் தொடர்ந்து உருவாக்கி வருகிறது என்றும், தங்கள் கொள்கைக்கு எதிரானவர்களை அச்சுறுத்துவதற்காக அமலாக்கத்துறையைக் கடந்த காலங்களாகப் பயன்படுத்தி வருவதோடு, அவர்களுக்கு நெருக்கடியை அதிகரித்து அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்தும் வேலையை பாஜக அரசு செய்து வருகிறது.
முஸ்லிம் சிறுபான்மை மக்களின் வக்பு சொத்துக்களை, வக்பு திருத்தச் சட்டத்தின் மூலம் அபகரிப்பதற்குக் கடுமையாக எதிர்த்தவர் SDPI கட்சியின் அகில இந்தியத் தேசியத் தலைவர் ஃபைஸி ஆவார்.
பாஜக அரசின் எதிர்க்குரல்களை ஒடுக்கும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். பொய்யான குற்றச்சாட்டின் கீழ், அமலாக்கத்துறையைத் தவறாகப் பயன்படுத்தி, ஜனநாயகச் சக்திகளை மிரட்டி ஒடுக்கும் பாசிச பாஜக அரசின் அடக்குமுறைச் செயலாகும் என்று இவ்வாறு பேசினர்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதுமாக மாவட்டத் தலைநகரில் நேற்றைய தினம் நடைபெற்றது.இதில் SDPI கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.