2025 மார்ச் 09
கிங் ஃபிசர் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்கள் பணமோசடி,வங்கிக் கடன்களை அடைக்க முடியாமல் போன பொருளாதாரக் குற்றவாளிகள்.
நாங்கள் யாரையும் விட்டு வைக்கவில்லை. அவர்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டாலும்,அவர்களைப் பின்தொடர்ந்துள்ளோம். வங்கிகளுக்குத் திரும்பிச் செல்ல வேண்டிய பணம் திரும்பிச் செல்வதை நாங்கள் உறுதி செய்வோம் என்று இவர்கள் விசயத்தில் இப்படி கூறுகிறது மத்திய பாஜக மோடி அரசு.
2019 முதல் 2023 வரை கடுமையான பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையில் 900 க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும், இவற்றில், 42 வழக்குகள் மட்டுமே முடித்துள்ளது. வழக்குகள் பதிவிடுவதும் ஆளும் கட்சிக்குச் சாதகமானவர்களைத் தப்பவிடுவதும், குறைந்த தண்டனை விகிதம் குறித்தும் வழக்கு விசாரணையின் தரத்தை அமலாக்கத்துறை கவனிக்கவேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பத்திரம் மூலம் இந்தியாவின் பல கோடி பணத்தினை வைத்துள்ள பாஜக கட்சியையும். இவர்களின் ஆதரவாளர்களையும் அமலாக்கத்துறையின் மூலம் இதுவரையும் எந்த நடவடிக்கைகளும் இருப்பதில்லை. பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய EDயை பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகளும் தொடர்ச்சியாகக் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு SDPI கட்சியின் அகில இந்தியத் தேசியத் தலைவர் எம் கே ஃபைஸியை அமலாக்கத்துறை கைது செய்ததுடன், நாடு முழுவதும் உள்ள SDPI கட்சியின் மாநிலத்தின் தலைமை அலுவலகங்களில் சோதனை நடத்தியது.இதில் எந்தவிதமான பணமோசடிகளுக்கான ஆதாரங்கள் இல்லை. இந்த நிலையில் அலுவலகங்களுக்கு வெளியில் SDPI கட்சியினர் கோஷங்களை எழுப்பியும்,கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். மும்பையில் சோதனை செய்து வெளியில் வந்த அமலாக்கத் துறையினருக்கு பூ கொடுத்தும் வரவேற்றனர்.
அமித்ஷா தலைமையில் இயங்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆட்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைத் தடை செய்தனர். அதன் அரசியல் பிரிவான SDPI கட்சி தனது தேர்தல் களங்களில் அசுர வளர்ச்சியினைப் பெருத்துக்கொள்ளமுடியாத பாஜக கட்சி. அமலாக்கத்துறையின் மூலம் அவ்வப்போது எதிர் கட்சியினரை அச்சுறுத்துவது வாடிக்கையாகிவிட்டது.