2025 மாரச் 13
சாமானியனுக்குக் குலக்கல்வியும், உயர்ஜாதியினர்க்கு உயர்கல்வி என அதற்கான செயல் திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தி வருகிறது ஒன்றிய அரசு.இவற்றை எதிர்கொள்ள முடியாமல் ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலங்களைக் கட்டமைப்பதில் மிகுந்த சிரமத்தினைத் தற்போது சந்தித்து வருகின்றனர்.
பட்டம் மேற்படிப்பில் மாணவர்கள் பயின்ற கல்வி காலத்திற்கு ஏற்ப சான்றிதழ் வழங்கி பாதியில் நிறுத்தினாலும் பிரச்சினைகள் இல்லை என்கிறது புதியகல்வி கொள்கை பாடத்திட்டம்.
ஓராண்டு, ஈராண்டு, மூன்றாண்டு,என காலத்தை வீணடித்து பயிற்சிப் பள்ளியில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து NEET,JEE என ஆராய்ச்சி, மேற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுக்குத் தயாராகி வரச்சொல்கிறது தேசியத் தேர்வு முகமை.
பிஞ்சு பிள்ளைகளுக்கு மும்மொழிக் கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு அழுத்தம் கொடுக்கப்படுவது என இந்திய அளவில் சிறந்து விளங்கும் தமிழக மாநில கல்வி முறைகளைச் சீர்குலைக்க முயல்கிறது மோடி அரசு.
வசதியுள்ளவர்கள் பயன்பெறும் வகையில் CBSC என்ற கல்வி பாடத்திட்டத்தை ஊக்கப்படுத்தப் படுத்தியும் மருத்துவம்,ஆராய்ச்சி,மேற்படிப்புக்கான தேர்வுகளில் வினாத்தாள்கள் CBSC பாடத்திட்ட அடிப்படையில் கேட்கப்படுவதால் இந்தக் கல்வி நிறுவனங்களில் தான் தற்போது அரசியல்வாதிகள்,அரசு அதிகாரிகள்,அரசு ஆசிரியர்களின், எனத் தங்கள் பிள்ளைகள் படிக்க அனுப்புகின்றனர்.
+2 மதிப்பெண்கள் தற்போது உயர் கல்விகளுக்குக் கணக்கில் பெரிதாக எடுத்த கொள்ளும் நிலையில் இல்லை என்பதுடன் மாநிலக் கல்வி முறைகுறித்து பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை திட்டங்கள் அனைத்தும் ஏழை,எளிய மக்களுக்கு ஆபத்தானதாகும். அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு கிடைப்பதைத் தடுக்கும் வேலையைக் கடந்த பத்தாண்டுகளாக மோடி அரசு செய்து வருவதோடு மட்டுமல்லாமல். மும்மொழிக் கல்விக் கொள்கை என்ற அடிப்படையில் இந்தி மொழியைக் கட்டாயமாகத் தமிழ் நாட்டில் திணிக்க முயற்சித்துவருகிறது. இவற்றை அமல்படுத்தாத காரணத்தைக் கூறி தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நிவாரண நிதியைக்கூட ஒன்றிய அரசு தர மறுப்பதும். தமிழகப் பாஜகவினர் இந்தி மொழியை கற்க மாணவர்கள் மத்தியில் ஆதரவு பெற பிஸ்கட் கொடுத்து கையெழுத்து வாங்குவதும்,அவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவது அயோக்கியத்தனமானது.
காலம்காலமாகப் பார்ப்பன தந்திரங்களை வீழ்த்திய திராவிடம்.இனி தெற்கிலிருந்து வடக்கிலும் சனாதன இருள் நீக்கிட சூரியனே உதித்திடவேண்டும்.திராவிடத் தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகள் கல்வி முறையில் சிறந்து விளங்கும் மாநிலத்தை, சீர்குலைவுக்கும் ஒன்றிய மோடி அரசின் திட்டங்களைத் தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் மு க ஸ்டாலின் முன் நிற்கும் தற்போதைய சவால்கள் எனலாம்.