பொதக்குடி மார்ச் 13
ஈரான் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொதக்குடி A.M.தாஜ்ஜூதீன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் அணுவுலைகள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானை மட்டும் பாதிக்காது. அதன் சுற்றுமுள்ள அனைத்து நாடுகளின் வாழ்வாதாரத்தையும் கெடுத்து விடும் அபாயமுள்ளது. கத்தார் போன்ற நாடுகளும் எச்சரித்திருக்கின்றன தான் மிகவும் பாதுகாப்பான தேசமாக இருப்பதாக அமெரிக்கா கருதிக் கொண்டிருக்கிறது. அந்த நினைப்பு மிகவும் பிழையானது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை, அதுவும் அணுக்குண்டுகளைத் தாங்கி வரும் ஏவுகணைகளையும் பெரும்பாலான நாடுகள் கொண்டுள்ளது. அமெரிக்காவின் மீது எதிர்த் தாக்குதல் நடக்குமேயானால் என்ன விளைவுகள் நிகழும் என்பதை மல்யுத்த மூடன் ட்ரம்ப் நினைவில் கொள்ள வேண்டும்.
24 நாடுகளின் துணையோடு, அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்தபோது, 24 மணி நேரத்தில் ஈராக்கை நிர்மூலமாக்கிவிடுவோம் எனச் சூளுரைத்தார் அன்றைய ஜனாதிபதி புஷ் ஆனால் நிகழ்ந்ததோ போர் பல மாதங்கள்.
அன்று ஈராக்குக்கு, ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான் இவற்றில் ஏதேனும் ஒன்று துணை நின்றிருக்குமேயானால், அமெரிக்காவின் இயலாமை வெட்ட வெளிச்சத்திற்கு வந்திருக்கும். அமெரிக்கா திருந்த வேண்டும். இல்லையேல் நட்பு நாடுகள் அமெரிக்காவைத் தனிமை படுத்திட வேண்டும் எனத் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.