திருத்துறைப்பூண்டி மார்ச் 15
திருவாரூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் செயற்குழுக் கூட்டம் திருத்துறைப்பூண்டி சேம்பர் ஆஃப் காமர்ஸ் கட்டிடத்தில் தலைவர் திரு AR.லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மருந்து வணிகர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் மருந்து வணிகம் தொடர்பாகத் தங்களுடைய கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
மேலும் திருவாரூர் மாவட்டம் மருந்து வணிகர்கள் சங்கம் பொதுக்குழுக் கூட்டம் நடத்திடவும், சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 20 தேதியன்று நடத்திடவும்,தேர்தல் அதிகாரியாக திரு முருகப்பன் அவர்களை நியமித்தனர். இந்தக் கூட்டத்தில் மருந்து வணிகச் சங்க செயலாளர் S.ராமச்சந்திரன் அவர்களும் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இறுதியாக V.நடராஜன் மாவட்ட பொருளாளர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.