உ.பி மார்ச் 14
வட மாநிலங்களில் கொண்டாடக் கூடிய வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றவர் மீது பூசிக் கொள்ளும் ஹோலி பண்டிகை இந்த வருடம் வெள்ளிக்கிழமை அன்று வந்ததை அடுத்து. உ.பி முதலமைச்சர் யோகியும்,உயர் காவல்துறை அதிகாரியும் மசூதிகள் மீது மதவாத கும்பல் தாக்குதல் நடத்தத் தூண்டும் வகையில் ஜூம்மா தொழுகை 50 தடவைக்கு மேல் வருவதாகவும்,ஹோலி பண்டிகை ஒரு முறைதான் வருடத்தில் வருவதாக வன்முறை உருவாக்கும் வகையில் கருத்துக்களைக் கூறி சட்ட ஒழுங்கை பாதுகாக்ககூடியவர்ளே பீதியை கிளப்பிவிட்டனர்.இது சங்பரிவார்களுக்கு குஷியை ஏற்படுத்தியது.
ஹோலி கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்ச்சியாக இந்துக்கள் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைத் தூவியும், உடலில் பூசியும்,தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். இந்த நம்பிக்கையில் உள்ளவர்கள் இவற்றை ஏற்றுக்கொள்வதும் ஒன்றும் பிரச்சினைகள் இல்லை.
ஆனால் பிற மதத்தின் நம்பிக்கையுடையவர்கள் மீது வண்ணப்பொடிகளைப் பூசுவதும் அநாகரிகமான காட்டுமிராண்டி செயலாகும். இதுபோன்று கடந்த வருடம் முஸ்லிம் ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவரின் மனைவியின் முகத்தில் வண்ணப் பொடியைப் பூசி அராஜகம் செய்தனர்.
இந்த வருடம் ஊர்வலம் என்ற பெயரில் அவ்வழியில் செல்லும்போது அங்கு அமைந்துள்ள பள்ளிவாசல்கள் மீது வேண்டுமெனச் சங்பரிவாரக் கும்பல்கள் வண்ணப் பொடிகளை வீசுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று முதல்வர் யோகியின் போட்டியே அவற்றைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது,
இதையடுத்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் கலவரம் ஏற்படாமல் தடுக்க என்று கூறி இதுவரை செய்திடாத காரியமாக அலிகர், பரேலி, சம்பல் நகரங்களில் உள்ள சில மசூதிகள் மேலும் ம.பி,பீகார் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் தார்ப்பாய்களால் மூடப்பட்டது.இதை செய்வதற்குக் காவல்துறையே உத்தரவிடுவது ஜனாநாயக் நாட்டில் கேவலமான செயல்கள் ஆகும்.
இந்தச் சூழலில் உ.பி இஸ்லாமியர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளை இதற்குத் தெரிவித்துள்ளனர். மத வெறுப்பைப் பரப்பும் வகையிலும் கருத்துகளை வெளியிடுவதும் வன்மத்தைகக்கும் செயல்கள் தான். முதலமைச்சராகும் போது இதுபோன்ற பதவிப் பிரமாணம் செய்யவில்லை. மாறாக, அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதாகவும், பாகுபாடு இல்லாமல் செயல்படுவதாகவும் பிரமாணம் செய்தவர்கள். அனைத்துத் தர மக்களையும் சமமாக நடத்தவேண்டிய இடத்தில் உள்ளவர்கள்.
இதற்கு மாற்றமாக இந்தியாவில் சாமியார் ஆட்சி செய்யும் யோகி முதலமைச்சராக உள்ள ஒரே மாநிலம்,சட்ட ஒழுங்கு எப்போதுமே சீர்கெட்டுள்ள உ.பியில் தான் முஸ்லிம்களை அச்சுறுத்திப் இவ்வாறு பேசியுள்ளனர்.விநாயக சதுர்த்தியை வைத்து கலவரம் உருவாக்கியவர்கள்,புதிய அஜந்தாவாக ஹோலி பண்டிகையை பாஜகவினர் தற்போது கையில் எடுத்துள்ளனர்.