மும்பை மார்ச் 19
சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாற்றை சாவா எனும் பெயரில் திரைப்படமாகி உள்ளது. லக்ஷமன் உடேகர் இயக்கிய இந்தத் திரைப்படம் முகலாயர்களுக்கு எதிரான மராத்திய மன்னர்களின் போராட்டத்தைக் கதையாகவும், இறுதியில் சம்பாஜி மன்னர் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்து ஒளரங்கசீப்பினால் கொல்லப்பட்டதாக வரலாற்று உண்மைக்கு மாற்றமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரச்சனைக்கு மூலக்காரணமான இந்தத் திரைப்படமானது,நாக்பூரில் வன்முறை ஏற்படுத்தியது.இதில் மூன்று இணை ஆணையர்கள் உட்பட 33 காவல் துறையினர் காயம் அடைந்தனர்.
சாவா திரைப்படமே முகலாய மன்னர் ஒளரங்கசீப் மீது மக்களின் கோபத்தைத் தூண்டியதும் என்றும் நாக்பூர் கலவரம் குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரச் சட்டப் பேரவையில் ஒத்துக்கொண்டுள்ளார்.
இந்த நிலையல் பாபர் மசூதிக்கு நேர்ந்த கதிதான் ஒளரங்கசீப் கல்லறைக்கும் ஏற்படும் என்று விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள போன்ற அமைப்புகள் கலவரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இது குறித்து மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்றோம் , உண்மையான நாட்டுப் பற்றுக் உள்ளவர்கள் ஒளரங்கசீப்பை போற்ற மாட்டார்கள் எனவும், மகாராஷ்டிராவின் எதிரியான அவருடைய மிச்சங்கள் ஏன் இங்கு வைத்திருக்க இருக்க வேண்டும் என்று சிண்டு முடித்துப்பேசியுள்ளார்.
நாட்டு மக்களை நிம்மதியாக வாழ விடக்கூடாது என்பதற்காகவே இது போன்றக் கலவரங்களை ஏற்படுத்துவதில் பாஜக ஆளும் மாநிலத்தின் முதல்வர்களே முதன்மை இடத்தைப் பிடித்துள்ளனர்.
ஹோலி பண்டிகயை குறித்து உ.பி முதல்வரும், அடுத்து ஷிண்டே எனத் தங்களுடைய கருத்துக்களைக் கூறி நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.இது இந்துத்துவாவினர்க்கு கலவரத்துக்கான சாதக நிலையை ஏற்படுத்தயுள்ளன.
சாவா திரைப்படம் தணிக்கைத்துறைக்குச் சென்று தான் இவை திரைக்கு வருகின்றன. சமூக பதற்றத்தை உருவாக்கக்கூடிய கதைகளைத் திரையிடுவதற்கு இவர்கள் அனுமதி கொடுப்பது ஏன் ?
இந்தப் பிரச்சனைக்குக் காரணமாக இருக்கக்கூடிய திரைப்படக் குழுவினரும், இவற்றைச் சரியாகத் தனிக்கை செய்திடாத தணிக்கை குழுவினர்தான் இந்தக் கலவரத்திற்கு முதன்மை காரணமானவர்கள். இவர்கள் மீதுதான் நியாயமாக உரிய கைது நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படவேண்டும்.
சினிமா துறையினர் சமூகத்தில் பிரிவினைகளையும்,கலவரத்துக்கும் காரணமாவதோடு, தணிக்கைத் துறையும் சரிவரத் தன்னுடைய பொறுப்புகளைச் செய்திடாததே புதிய பிரச்சனையாக இது உருவாகியுள்ளது. இந்தநிலையில் ஒளரங்கசீப் சமாதியோடு சண்டைபோட சாவர்க்கர் வாரிசுகளும் களம் இறங்கியுள்ளனர்.
ஔரங்கசீப் குறித்துப் பேசிய சமாஜ்வாதி MLAவை சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்து வைத்திருப்பதும்,ஔரங்கசீப் சமாதியை இடிப்பவர்களுக்கு 21 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று உ.பியில் உள்ள இந்துத்துவா அமைப்பு அறிவித்திருப்பதும் இந்தப் பிரச்சனையில் குறிப்பிடத்தக்கது.