பொதக்குடி மார்ச் 21
திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் அனைத்து வர்த்தக நலச் சங்கத்தில் கொடியேற்று விழா நிகழ்ச்சி தலைவர் அப்துல் ரசித் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் A.M.விக்கிரமராஜா கொடியேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
பின்பு அனைத்து வர்த்தக நலச் சங்க அலுவலகத்திற்கு வருகை தந்த விக்கிரமராஜா நிர்வாகிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு, வர்த்தகர் நலச் சங்கத்தினர் வைத்த கோரிக்கையைக் கேட்டறிந்து அவற்றைச் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
இதில் திருவாரூர் மாவட்ட வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் மற்றும் பொதக்குடி அனைத்து வணிகர் நலச்சங்க நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.