அத்திக்கடை மார்ச் 29
திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபா கூட்டம் இராஜலட்சுமி பற்றாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பூண்டி கே. கலைவாணனுக்கு அத்திக்கடை ஊராட்சியில் நீண்ட நாட்களாக வீடு மற்றும் குடியிருப்பு மனைகளுக்கு நிலுவை இனம் என்று நில வகைப்பாடு உள்ளதை மாற்றி,இங்கு குடியிருந்து வருபவர்களுக்குப் பட்டா வழங்கிட வேண்டி நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தமைக்கு அத்திக்கடை ஊராட்சி மன்றம் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தும்,
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு புதியதாக வீடு கட்டுபவர்கள் கட்டாயம் மழைநீர் சேமிப்பு தொட்டி அவசியம் அமைத்திட வேண்டும் என்பதாகவும், மேலும் புதியதாக வீடு கட்டுபவர்கள் தங்களுடைய மனைகளைச் சுத்தம் செய்து அருகில் இருக்கக்கூடிய வாய்க்கால் மற்றும் நீர்நிலைகள், குளங்களில் தங்கள் மனையில் அகற்றிய மரக்கழிவுகளைப் கொட்டி அசுத்தபடுத்தகூடாது எனத் இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கிராம சபா கூட்டத்தில் ஊராட்சி செயலர் கலைராஜா,கணினி இயக்குநர் மேனகா,மதி,பஷீர் மற்றும் பொதுமக்கள் தூய்மை காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.