உடலை மறைக்க ஆடையா? அல்லது ஆடையை வெளிக்காட்ட உடலா?
உடலை மறைக்க ஆடை என்றால், ஆடை கலை இழந்து இருந்தாலும் கனத்திருக்கும். ஆடையை வெளிக்காட்ட உடல் என்றால், ஆடையில் கனம் இருக்காது, கலை மட்டுமே இருக்கும். இன்றைய ஆடை எப்படி?பதில் எழுத்தில் இல்லை, நம் சிந்தனையில்.
தன் அழகை மறைப்பது உயர் பண்பு. தன் அழகை வெளிக் காட்டுவது, அடிமைப் பண்பு. இதுவே திருவிதாங்கூர் தோல் சீலை போராட்டம், நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். ஆனால் இன்றோ பெண் சுதந்திரம் எனும் பெயரில், தலைகீழ் பாடம்.
மாராப்பு இன்றைய யுவதிகள் எடுத்துக் கொள்ள மறுக்கும் மாபெரும் கேடயம். இதன் விபரீதத்தை அறிந்த வள்ளுவன் 3000 ஆண்டுகளுக்கு முன்பே பாடிவிட்டான்.
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
கட்படாம் அணியாத மதயானையால் வரும் ஆபத்துகளை விட, மாராப்பு அணியாத பெண்களால் வரும் ஆபத்துகள் அதிகமானவை என்பது வள்ளுவனின் கூற்று.